முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மானாடு கலியுக வரதர் சாஸ்தா கோவில் கும்பாபிஷேக விழா

ஞாயிற்றுக்கிழமை, 4 ஜூன் 2017      தூத்துக்குடி
Image Unavailable

மானாடு கலியுக வரதர் சாஸ்தா திருக்கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 கோவிலின் திருப்பணிகள்

கிபி 7ம் நுற்றாண்டில் கட்டப்பட்ட மாநாடு கலியுக வரதர் சாஸ்தா திருக்கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.  கடந்த 74ஆண்டுகளாக கும்பாபிஷேக விழா நடைபெற வில்லை. இதனால் கோவில் சிதிலமடைந்து காணப்பட்டது. தற்போது கோவிலின் திருப்பணிகள் நடந்து முடிந்தது.

பல்வேறு பூஜைகள்

கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த மே 31ம்தேதி காலை 5.30மணிக்கு மங்களஇசை, திருமுறைப்பாராயணம், பூர்வாங்க விக்னேஷ்வர பூஜை, பஞ்ச கவ்யம், கணபதி ஹோமமும், மாலை 5.30மணிக்கு மங்கள இசை, திருமுறைப்பாராயணம், பூர்வாங்க பூஜை, வாஸ்துசாந்தி, தீபாராதனையும், ஜுன் 1ம்தேதி காலை 7.45மணிக்கு மங்களஇசை, பூர்வாங்க விக்னேஸ்வர பூஜை, சுதர்சன ஹோமம், நவக்ரஹ ஹோமம், தீபாராதனையும், மாலை 5.30மணிக்கு மங்களஇசை, திருமுறைப்பாராயணம், திசாஹோமம், மஹாலெட்சுமி ஹோமம், சுமங்கலி பூஜை, தீபஸ்தனம், கோபூஜையும் நடந்தது.

யாகசாலை பூஜைகள்

2ம்தேதி காலை 8மணிக்கு மங்களஇசை, திருமுறைப்பாராயணம், பூர்வாங்க பூஜைகள், மருத் சங்க் ரஹணம், சூர்யாகனி சங்கரஹ்னம், நயனஉன்மீளனம், மாலை 5மணிக்கு  தீர்த்த சங்க்ரஹணம் தீர்த்தம் எடுத்தல், அங்குரர்ப்பணம், ரக்ஷா பந்தனம், கலா கர்ஷ்ன, சுந்தர கடப்புறப்பாடு, யாக சாலையில் கடஸ்தாபனம் முதற்கால யாகசாலை பூஜைகள், பூர்ணாஹீதி, தீபாராதனை, இரவு புதிய மூர்த்திகளுக்கு யந்திர ஸ்தாபனம் நடந்தது.

மஹாகும்பாபிஷேகம்

3ம்தேதி காலை 8.30மணிக்கு இரண்டாம்கால யாகசாலை பூஜைகள், விசேஷ த்ரவ்யாஹீதி, மாலை 5மணி திருமுறைப்பாராயணம், பூர்வாங்க பூஜைகள், மூன்றாம் கால யாக சாலை பூஜைகள், விசேஷ த்ரவ்யாஹீதி, பூர்ணா ஹீதியும், 4ம்தேதி காலை 5மணிக்கு மங்கள இசை, திருமுறைப்பாராயணம், பூர்வாங்க பூஜைகள், நான்காம் காலை யாகசாலை பூஜைகள், தத்வார்ச்சனை, ஸ்பர்ஷாஹீதி, காலை 9மணி முதல் காலை 10.15மணிக்குள் யாத்ராதானம், சுந்தர குடங்கள் புறப்பாடு, சுந்தர விமானங்களுக்கு மஹாகும்பாபிஷேகம், பரிவார மூர்த்தி சஹித பூரணை புஷ்கலை உடனுறை கலியுக வரத தர்ம சாஸ்தாவிற்கும் தீவஜ ஸ்தம்பத்த்திற்கும் மஹாகும்பாபிஷேகம் நடந்தது.  ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கோவில் பரம்பரை அர்ச்சகர் வெங்கடேஷ்வரஐயர் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து