பிரணராய் வீட்டில் சி.பி.ஐ.சோதனை: அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை: வெங்கய்யா நாயுடு பேட்டி

திங்கட்கிழமை, 5 ஜூன் 2017      அரசியல்
VENKAIAH NAIDU 2017 05 22

புதுடெல்லி, என்டிடிவி நிறுவனர் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான 3 இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியதில் எந்தவித அரசியல் உள்நோக்கமும் இல்லை என்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

ஒரு தனியார் வங்கியான ஐசிஐசிஐ மீது கூறப்பட்ட பழைய குற்றச்சாட்டை அடிப்படையாக வைத்து என்டிடிவியில்   நிகழ்ச்சியை ஒளிபரப்பியதால் அந்த வங்கிக்கு சுமார் ரூ.48 கோடி வரை  நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையொட்டி எழுந்த புகாரையொட்டி புதுடெல்லியில் உள்ள பிரணாய் ராய் வீடு நகரில் அவருக்கு சொந்தமான இதர 2 இடங்களிலும் மற்றும் டேராடூனில் ராயிக்கு சொந்தமான ஒரு இடத்திலும் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையானது அரசியல் உள்நோக்கத்துடன் செய்யப்பட்டதில்லை. சட்டம் தன் கடமையை செய்யும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.

அடிப்படை ஆதாரம் உள்ள தகவல் அடிப்படையில்தான் சி.பி.ஐ. சோதனை நடத்தும். ஊடகங்கள் வைத்திருப்பதற்காக சிலர் தவறை சாதாரணமாக செய்கிறார்கள்.  அதை அரசு பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. அதிகாரிகள் தங்களுடைய கடமையை செய்கிறார்கள். இதில் எந்தவிதமான அரசியல் தலையீடும் இல்லை. நாட்டில் செய்தி ஸ்தாபனங்கள் சுதந்திரமாக செயல்படுகின்றன என்றும் வெங்கய்யா நாயுடு மேலும் கூறினார்.

பிரணாய் ராய்  அவரது மனைவி ராதிகா மற்றும் ஆர்ஆர்பிஆர் உரிமையாளர்கள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதற்கிடையில் சிபிஐ மீது என்டிடிவி குற்றஞ்சாட்டியுள்ளது. முடிவு பெறாத பழைய குற்றச்சாட்டின் அடிப்படையில் என்டிடிவி மற்றும் அதன் நிறுவனர்கள் மீது சிபிஐ துன்புறுத்த தொடங்கியுள்ளது என்று அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. என்டிடிவி மீது ஏவப்பட்டுள்ள இந்த சூன்ய வேட்டையை என்டிடிவியும் அதன் நிறுவனர்களும்  அயராது பல ஏஜன்சிகள்  மூலம் எதிர்ப்பார்கள் என்றும்  கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் ஜனநாயகத்தையும் பேச்சு உரிமையையும் நசுக்கும் இந்த முயற்சிக்கு நாங்கள் ஒரு போதும் பணியமாட்டோம் என்றும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.      

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து