பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளும் அரசு அறிவிப்பின்படி திறக்கப்படும்  : ஆணையர் கார்த்திகேயன்  அறிவிப்பு 

செவ்வாய்க்கிழமை, 6 ஜூன் 2017      சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளும் அரசு அறிவிப்பின்படி, இன்று 07.06.2017 துவங்கப்பட உள்ளது என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் முனைவர்.தா.கார்த்திகேயன், தெரிவித்துள்ளார்.

எழுது பொருள்
 
பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் 281 பள்ளிகள் செயல்பாட்டில் உள்ளன. அனைத்து பள்ளிகளும் அரசு அறிவிப்பின்படி,இன்று 07.06.2017 துவங்கப்பட உள்ளது. அனைத்து பள்ளிகளிலும் வகுப்பறைகள், பள்ளி வளாகங்கள், நீர்த்தொட்டிகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.மேலும், பள்ளி துவங்கும் நாளில் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்கும் பொருட்டு, பள்ளிகளில் வாழைக்கன்று, பலூன் மற்றும் மாவிலை தோரணம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாணவ, மாணவியர்களுக்கு இனிப்புகள், எழுதுப் பொருட்கள் மற்றும் புத்தகங்களும் வழங்கப்படவுள்ளது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சென்னைப் பள்ளிகளில் சேர்த்து பயனடையுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் முனைவர்.தா.கார்த்திகேயன், தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து