கொத்தவால்சாவடி பகுதியில் தடை செய்யப்பட்ட மாவா போதை பொருளை விற்பனை செய்த நபர்  கைது

செவ்வாய்க்கிழமை, 6 ஜூன் 2017      சென்னை

சென்னையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை வஸ்த்துக்களான மாவா, குட்கா, பான் மசாலா, ஹான்ஸ் மற்றும் போதை பாக்குகள் தயாரிப்பவர்களையும், கடைகளில் விற்பவர்களையும், கண்காணித்து கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள சென்னை பெருநகரக் காவல் ஆணையர் .கா.விசுவநாதன்,உத்தரவிட்டார்.

ஆஜர்

 அதன்பேரில், அனைத்து காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அவர்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகள் நடத்தி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதன்பேரில் கொத்தவால்சாவடி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று முன் தீனம்அன்று மாலை சுமார் 06.00 மணியளவில் கொத்தவால் சாவடி பெரிய உத்தண்டி தெருவில் உள்ள லட்சுமி டிரேடர்ஸ் கடையை சந்தேகத்தின்பேரில், ரகசியமாக கண்காணித்தபோது, அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மாவா புகையிலை பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது

அதன்பேரில், மாவா தயாரித்து விற்பனை செய்து வந்த கடையின் உரிமையாளர் மகேஷ்குமார்குப்தா, /39, கொண்டித்தோப்பு, என்பவரை கைது செய்தனர். மேற்படி கடையில் உள்ள குடோனில் போலீசார் சோதனை செய்து அங்கு மறைத்து வைத்திருந்த ஜர்தா புகையிலை -1 மூட்டை, -படிடன 1 மூட்டை, சங்கர் புகையிலை 1 மூட்டை , ஹான்ஸ்-3 பாக்ஸ்கள், குட்கா 1 மூட்டை, சந்து தரா 1 மூட்டை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட மகேஷ்குமார் குப்தா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து