தஞ்சாவூர் மாவட்டத்தில் தொழிலாளர் நலத்துறை சமூக பாதுகாப்புத் திட்டம் தொடர்பாக கண்காணிப்பு குழு கூட்டம் : கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் நடந்தது

செவ்வாய்க்கிழமை, 6 ஜூன் 2017      தஞ்சாவூர்
Thanjai 2017 06 06

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தொழிலாளர் நலத்துறை சமூக பாதுகாப்புத் திட்டம் தொடர்பாக மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தலைமையில் நேற்று (06.06.2017) நடைபெற்றது.

உடலுழைப்பு

இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தெரிவித்ததாவது,தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர் நல சட்டத்தின்படி பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களை கண்டறிந்து புள்ளி விவரம் சேகரித்து பராமரிக்க வேண்டும்.தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் படிவத்தில் உரிய தொழில் செய்யும் தொழிலாளர்கள் மட்டும் பதிவு செய்ய வேண்டும். காலத்திற்குள் தொழிலாளர்களை உறுப்பினராக பதிவு செய்து அவர்களுக்கு உடனடியாக தொழிலாளர் அடையாள அட்;டை வழங்க வேண்டும்.

பதிவு பெற்ற தொழிலாளர்கள் மனுக்களில் உள்ள விவரங்களை சரிபார்க்க வேண்டும். தமிழ்நாடு கட்டுமான கழகம் மூலம் நடத்தப்படும் குறுகிய கால திறன் எய்தும் பயிற்சியில் உறுப்பினர்களை சேர்த்து பயன் பெற செய்ய வேண்டும். பதிவு செய்த தொழிலாளர்களுக்கு விரைவாக அரசின் நலத்திட்ட உதவித்தொகைகள் வழங்க வேண்டும். பதிவு பெற்ற தொழிற்சங்கங்கள்,தொழிலாளர்களிடம் கலந்தாய்வு செய்து அவர்களுக்கு கிடைக்கப்பெறும் உதவி தொகைகள் குறித்து விவரம் அறிதல் வேண்டும். தற்போது புலம் பெயர்;ந்த கட்டுமான தொழிலாளர்களை கண்டறிந்து தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும். அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் 100 சதவிகித அளவில் வங்கி சேமிப்பு கணக்கு துவங்குதல் வேண்டும்.

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகள் 5ம் வகுப்பு வரை பயின்று அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தால், வட்டாரத்திற்கு ஒருவர் வீதம் 385 குழந்தைகள் தேர்வு செய்து அவர்களுக்கு அந்தந்த பகுதிகளில் உள்ள சிறந்த தனியார் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை கல்வி வழங்கவும், இதே போல் 10ம் வகுப்பு அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை கண்டறிந்து மாவட்டத்தில் 10 மாணவர்கள் வீதம் (3 மாணவியர் உள்பட) தேர்வு செய்து அந்தந்த பகுதிகளில் சிறந்த தனியார் பள்ளிகளில் 11, 12ம் வகுப்பு கல்வி பயில அரசு அனுமதித்து ஆணை வெளியிட்டுள்ளது. இவர்களை கண்டறிந்து சிறந்த தனியார் பள்ளியில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொழிலாளர் நல அலுவலருக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

மேலும், 6 மற்றும் 11ம் வகுப்பில் தேர்வு செய்யப்பட்ட மாணாக்கர்களுக்கு அரசால் நியமிக்கப்பட்டுள்ள ஒரு நபர் குழு நிர்ணயம் செய்துள்ள கல்வி கட்டணம் ஆண்டு ஒன்றுக்கு விடுதி கட்டணம் ரூ.15,000 மற்றும் பராமரிப்பு கட்டணம் ரூ.5,000 வழங்கப்படுகிறதுஎனவே, தொழிற்சங்கம் வாயிலாக தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகள் தகுதியுள்ளவராக இருப்பின் தொழிலாளர் நல அலுவலகம் சமூக பாதுகாப்புத் திட்டம், கோர்ட் ரோடு, தஞ்சாவூர் அவர்களை தொடர்பு கொண்டு பயன் பெறலாம். இந்த வாய்ப்பை தொழிலாளர் நல வாரியத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு தொழிலாளர் நல அலுவலகம் தொழிற்சங்கம் வாயிலாக தொழிலாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் தொழிலாளர் நல அலுவலர் எஸ்.அப்துல் அஜீஸ், தொழிலாளர் ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து