முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்கள் சேர்ந்திட மாவட்ட கலந்தாய்வு: தி.மலை கலெக்டர் பிரசாந்த் வடநேரே தகவல்

செவ்வாய்க்கிழமை, 6 ஜூன் 2017      திருவண்ணாமலை

 

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரவும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற் பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் மூலம் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கைக்ககான விண்ணப்பங்கள் ஷ்ஷ்ஷ்.sளீவீறீறீtக்ஷீணீவீஸீவீஸீரீ.tஸீ.ரீஷீஸ்.வீஸீ என்ற இணைய தளம் வாயிலாக வரவேற்க்கப்படுகின்றன.

தொழிற் பயிற்சி

தொழிற் பயிற்சி நிலையங்களில் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கும் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற் பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8-ம் வகுப்பு தேர்ச்சி 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் உள்ள தொழிற் பயி;ற்சி நிலைய விவரங்கள் தொழிற் பிரிவுகள் இவற்றிற்கான கல்வி தகுதி வயது வரம்பு இடஒதுக்கீடு ஆகியவை இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் தரப்பட்டுள்ளன.

மேற்கண்ட இணையதளத்தில் கடந்த 10ந் தேதி முதல் 31ந் தேதி வரை விண்ணப்பம் மற்றும் விளக்க கையேட்டினை மாணவர்கள் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதை தற்போது வரும் 15ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் இணையதளத்தில் கொடுத்துள்ள அறிவுரைகளை கவனமாக படித்து புரிந்துக் கொண்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் எந்த மாவட்டத்தில் கலந்தாய்வில் கலந்து கொள்ள விரும்புகிறார்கள் என்ற விவரம் குறிப்பிட வேண்டும். ஒரு மாணவர் விரும்பினால் பல மாவட்டங்களில் தொழிற் பயிற்சி நிலைய சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.

மதிப்பெண் அடிப்படையில் மாவட்ட கலந்தாய்வுக்ககான நிகழ்ச்சி நிரலும் இதே இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும். இணையதளத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் மாவட்ட கலந்தாய்வு நடைபெறும் என்ற விவரம் தரப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சி நிரலின்படி மாணவர்கள் சிங்கிள் விண்டோ முறையில் தாங்கள் சேர விரும்பும் தொழிற் பிரிவு மற்றும் தொழிற் பயிற்சி நிலையம் ஆகியவற்றை கலந்தாய்வில் கலந்து கொண்டு தேர்வு செய்யலாம் இவ்வாறு அவர் தெரிவித்ள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து