வேலூர் மாவட்டத்தில் ஏரி,குளங்களில் மண் எடுக்க வரும் 10ம் தேதி அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் சி.அ.ராமன் தகவல்

செவ்வாய்க்கிழமை, 6 ஜூன் 2017      வேலூர்
ph vlr a

 

வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாய பெருமக்கள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் பயனடையும் வகையில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள், குட்டைகள் மற்றும் குளங்களில் இருந்து மண், வண்டல் மண், சவுடு, கிராவல், ஏனைய மண் வகைகள் எடுத்து தங்களது விவசாய நிலங்களை மேம்படுத்தவும் மற்றும் மண்பாண்டம் செய்யவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு மண் வகைகள் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

விண்ணப்பிக்கலாம்

 

ஆகையால் வேலூர் மாவட்ட விவசாயிகள் ஏரி மற்றும் குளங்களில் இருந்து மண், வண்டல் மண், சவுடு, கிராவல், ஏனைய மண் வகைகளை எடுத்து தங்களது விவசாய நிலங்களை மேம்படுத்தும் பணியின் தற்போது வரை ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் கலெக்டர் சி.அ.ராமன், தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின் கலெக்டர் தெரிவித்ததாவது:-

வரும் சனிக்கிழமை ஜுன் 10 ஆம் தேதியன்று அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. இந்த சிறப்பு முகாம்களில் வேலூர் மாவட்ட விவசாயிகள் விண்ணப்பங்கள் வழங்கி ஏரி மற்றும் குளங்களில் இருந்து மண், வண்டல் மண், சவுடு, கிராவல், ஏனைய மண் வகைளை எடுக்க அனுமதி பெற்று தங்களது விவசாய நிலங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கலெக்டர் சி.அ.ராமன், கேட்டுக்கொண்டுள்ளார்.

இக்கூட்டத்தில்; மாவட்ட வருவாய் அலுவலர் மரு.செங்கோட்டையன், சார் கலெக்டர் (திருப்பத்தூர்) மரு.கார்த்திகேயன், கனிமவளத்துறை, விவசாயத்துறை, பொதுப்பணித்துறை அலுவலர்கள், அனைத்து கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து