ஆரணியில் காவல் துறை சார்பில் ஹெல்மேட் விழிப்புணர்வு ஊர்வலம்.

செவ்வாய்க்கிழமை, 6 ஜூன் 2017      திருவண்ணாமலை
a HELMET

ஆரணியில் காவல் துறை சார்பில் ஹெல்மேட் விழிப்புணர்வு ஊர்வலம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

ஹெல்மேட் விழிப்புணர்வு

ஆரணி டிஎஸ்பி ஜெரினாபேகம் உத்தரவின்பேரில் ஆரணி நகர காவல் நிலையம் முன்பு காவல் துறை சார்பில் ஹெல்மேட் விழிப்புணர்வு ஊர்வலத்தினை இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த ஊர்வலம் பழைய பஸ்நிலையம், பெரியகடைவீதி, எஸ்.எம்.ரோடு, காந்திரோடு, சூரியகுளம் ஆகிய வழியாக சென்றனர்.

மேலும் இதில் கிராமிய காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாலமன்ராஜா, போக்குவரத்து காவல் எஸ்.ஐ குமரேசன் மற்றும் போலீஸார் கலந்துகொண்டனர்.

 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து