முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடிமைப்பணிக்கான முதல்நிலை தேர்வு நடைபெறுவதையொட்டி முன்னேற்பாடுப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கோயம்புத்தூர் கலெக்டர் த.ந.ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது

செவ்வாய்க்கிழமை, 6 ஜூன் 2017      கோவை
Image Unavailable

மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் 18.06.2017 அன்று முற்பகல்(9.30 முதல் 11.30 வரை)  மற்றும் பிற்பகல்(2.30 முதல் 4.30 வரை) என இரு வேளைகளாக குடிமைப்பணி முதல்நிலை போட்டித் (Pசநடiஅiயெசல) தேர்வுகள் நடத்தப்படவுள்ளது. தேர்வுக்கான முன்னனேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன்   தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர்  தெரிவிக்கையில்,

பாதுகாப்பு ஏற்பாடுகள்

கோயம்புத்தூர் மாவட்டத்தில்  தேர்வு நடைபெறும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்துக்கொள்ள, முறையாக தேர்வுகளை நடத்திட மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால்  கண்கானிப்பு அலுவலர்கள், முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இத்தேர்விற்காக துணை கலெக்டர் நிலையில்  மொபைல் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஒவ்வொரு மையத்திற்கும் கூடுதல் கண்காணிப்பாளர்கள் மற்றும் உதவி மேற்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

கூடுதல் பேருந்துகள் இயக்கம்

இத்தேர்வில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு தேர்வு மையத்திற்கு செல்ல ஏதுவாக தேர்வு மையங்கள் அமைந்துள்ள பகுதிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தால் உக்கடம், காந்திபுரம் மற்றும் சிங்காநல்லூர் ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் போதுமான தளவாடங்கள் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் பாதுகாப்பின் பொருட்டு போதுமான காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையத்திற்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மின்சார வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

தேர்வு எழுத தடை

தேர்வு எழுதுபவர்கள் ஏதேனும் முறைகேட்டில் ஈடுப்பட்டால்  எதிர்காலத்தில் அரசு தேர்வுகள் எழுத தடை செய்யப்படுவது மட்டுமின்றி  மீது சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன்   தெரிவித்தார்.
 இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், காவல் துணை ஆணையர் துரை, மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர்(பொது) சிதம்பரம், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து