முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைச்சர் வெல்லமண்டி ந.நடராஜன் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 6 ஜூன் 2017      கன்னியாகுமரி
Image Unavailable

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா பகுதிகளின் மேம்பாடு குறித்து  சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி ந.நடராஜன் ஆய்வு மேற்கொண்டார்.

 அமைச்சர் ஆய்வு

கன்னியாகுமரி கடற்கரைப் பகுதியில் உள்ள காட்சி கோபுரம், நுழைவுச்சீட்டு வழங்குமிடம், உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், தமிழ்நாடு சுற்றுலா விடுதியில் உள்ள தங்கும் அறைகள் மற்றும் விடுதியில் தங்குபவர்களின் விபரங்கள் தொடர்பான பதிவேடுகளையும், தமிழ்நாடு சுற்றுலா விடுதியில் 1,000 பேர் அமரும் வசதி கொண்ட கருத்தரங்க அறை மற்றும் நீச்சல் குளம் அமையவுள்ள இடத்தையும்  சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி ந.நடராஜன்  பார்வையிட்டார்.பின்னர்,  சுற்றுலாத்துறை அமைச்சர்  அடிப்படை வசதிகள் மற்றும் ஏனைய வசதிகள் தொடர்பான கோரிக்கைகள் குறித்து சுற்றுலாப் பயணிகளிடம் கேட்டறிந்தார்.இந்த ஆய்வின் போது மாநிலங்களவை உறுப்பினர் அ.விஜயகுமார்   மற்றும் அரசு அலுவலர்களும் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து