முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாய்களை கட்டுப்படுத்த புதுவை அரசு எடுத்த நடவடிக்கை என்ன? அதிமுக எம்.எல்.ஏ.அன்பழகன் கேள்வி

செவ்வாய்க்கிழமை, 6 ஜூன் 2017      புதுச்சேரி

புதுச்சேரி சட்டசபையில் நேற்று பூஜ்ய நேரத்தில் அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் எம்எல்ஏ பேசினார். அவர் பேசியதாவது:-

 நாய்களால் பாதிப்பு

புதுச்சேரி நகர மற்றும் கிராம பகுதிகளில் நாய்களால் தினந்தோறும் அப்பாவி மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதில் தேவையற்ற காரணங்களை அரசு எடுத்துக் கூறி மக்களுடைய உயிர் பிரச்சனையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நகரப் பகுதி முழுவதும்நாய்களால்மக்கள் பாதிக்கப்படாத நாட்களே இல்லை.

துரத்தும் நாய்கள்

அந்த அளவுக்கு நாய்களின் பெருக்கம் அதிகமாக உள்ளது. இந்த சட்டமன்றத்திலேயே அதிகமாக உள்ளது. கடற்கரை பக்கம் யாரும்நடக்கவே முடியவில்லை. சுற்றுலா விடுதியில் 100-க்கும் மேற்பட்ட நாய்கள். இந்திரா காந்தி மைதானத்தில் ஓடவே முடியவில்லை. நரப் பகுதியில் ஒவ்வொரு சாலையிலும் 100-க்கும் மேற்பட்ட நய்கள் உள்ளன. தெருவில் செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள்நாய்களால் துரத்தப்படுகிறார்கள்.

23400 பேருக்கு நாய் கடி

இரு சக்கர வாகனத்தில் செல்வோரும் நாய்களால் துரத்தப்படுகிறார்கள். இரு சக்கர வாகனத்தில் செல்லும் கர்ப்பிணி பெண்களின்நிலை தான் பரிதாபமாக உள்ளது. புதுச்சேரியை பொருத்த வரை 90 ஆயிரத்திற்கும் அதிகமாக நாய்கள் உள்ளன. கடந்த ஆண்டில் 23400 பேர் நாய்  கடி பட்டுள்ளனர். சிலர் மரணமும் அடைந்துள்ளனர். ஆனால்அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நடவடிக்கை எடுக்காத அரசு

ஆண்டுதோறும்ஏதோ கருத்தடை செய்வதாக அரசு கூறி வருகிறது. கருத்தடை செய்தாலும்அந்த நாய் சுமார் 10 முதல் 15 ஆண்டுகள்வரை உயிர் வாழும். கருத்தடை செய்யப்பட்ட நாய்கள் மக்களை கடித்துக் கொண்டு தான் இருக்கின்றன. கிராம பகுதிகளில் நாய் கடிக்கு உரிய மருத்துவர் கூட ஆரம்ப சுகாதார நிலையங்களில் இல்லை. புதுச்சேரி உழவர்கரை நகராட்சியில் மட்டும் கருத்தடை செய்யப்டுகிறது.

நடவடிக்கை வேண்டும்

அனைத்து கிராம கொம்யூன் பகுதியிலும் கருத்தடை செய்ய வேண்டும். கருத்தடை செய்த நாய்களை மக்கள் வசிக்காத பகுதிகளில்மட்டும் விட்டுவிட்டு வரலாம். அல்லது ஆடு, மாடு பட்டி போன்று நாய் பட்டி ஏதாவது பகுதியில் அமைத்து அங்கு நாய்களை பராமரிக்கலாம். எனவே தினந்தோறும் நாய்களால் பாதிக்கப்படும் மக்கள் நிலை குறித்து அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து