முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் கோர்ட்டு வளாகத்தில் மாவட்ட நீதிபதி கயல்விழி மரக்கன்றுகள் நட்டார்

புதன்கிழமை, 7 ஜூன் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமநாதபுரம்,-சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு வாரத்தையொட்டி ராமநாதபுரம் கோர்ட்டு வளாகத்தில் மாவட்ட நீதிபதி கயல்விழி மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.

உலக சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருவதையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி கயல்விழி உத்தரவின்பேரில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகம், மரங்கள் வளர்ப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக நேற்று ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு வாரத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவில், மாவட்ட முதன்மை நீதிபதி கயல்விழி கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். அப்போது பேசிய அவர் மரங்கள் வளர்ப்பதன் அவசியத்தையும், தற்போது ஏற்பட்டு வரும் சுற்றுச்சூழல் அபாயத்தையும், மழையில்லாமல் வறட்சி நிலவுவதையும் விளக்கி கூறி மரங்கள் வளர்ப்பதன் அவசியத்தை விளக்கி கூறினார்.

நிகழ்ச்சியில், பொதுமக்களுக்கு மாவட்ட நீதிபதி கயல்விழி மரக்கன்றுகளை வழங்கி, தங்கள் பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு முறையாக பராமரித்து நாட்டுக்காக அல்லாமல் நமக்காக மரங்களை வளர்க்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். நிகழ்ச்சியில், கூடுதல் மாவட்ட நீதிபதி லிங்கேஸ்வரன், தலைமை குற்றவியல் நீதிபதி அனில்குமார், சார்பு நீதிபதிகள் ப்ரீத்தா, சொர்ணகுமார், மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஸ்குமார், வக்கீல்கள் சங்க தலைவர் அழகுபாலகிருஷ்ணன், செயலாளர் சலீம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து