முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான பனமரத்துப்பட்டி ஏரியில் வேளாண் பணிகளுக்காக வண்டல் மண் எடுக்கும் பணி: கலெக்டர் வா. சம்பத் ஆய்வு செய்தார்

புதன்கிழமை, 7 ஜூன் 2017      சேலம்
Image Unavailable

 

சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான பனமரத்துப்பட்டி ஏரி 2137 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இதில் 834.5 ஏக்கர் நீர்பிடிப்பு பகுதியாக உள்ளது. பனமரத்துப்பட்டி பகுதியில் உள்ள விளைநிலங்களை மேம்படுத்திடவும், ஏரியின் நீர் ஆதாரத்தை பெருக்கிடவும் தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகளில் திருத்தம் செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மு. பழனிசாமி அவர்களால் வெளியிடப்பட்டதன் அடிப்படையில் (02.6.2017) முதல் பனமரத்துப்பட்டி ஏரியில் வேளாண் பணிகளுக்கு வண்டல் மண் எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கலெக்டர் ஆய்வு

 

இதுவரை விண்ணப்பித்த 60 விவசாயிகளுக்கு வண்டல் மண் அள்ளுவதற்கான அனுமதி அளித்ததன் அடிப்படையில் 290 யூனிட் வண்டல் மண் வேளாண் பணிகளுக்காக விவசாயிகளால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து (07.6.2017) அன்று கலெக்டர் வா. சம்பத் பனமரத்துப்பட்டி ஏரியில் வேளாண் பணிகளுக்காக வண்டல் மண் எடுக்கும் பணிகளை ஆய்வு செய்தார். இத்திட்டம் குறித்து விவசாயிகளிடம் கலெக்டர் கேட்ட பொழுது தங்களது விளை நிலங்களில் உற்பத்தி திறனை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் விளைநிலங்களுக்கேற்ற தாது சத்துக்கள் நிறைய கிடைப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் மாட்ட கலெக்டர் விவசாயிகளிடம் தங்கள் விளை நிலங்களுக்கு தேவையான வண்டல் மண்களை எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக நிர்வாக நடவடிக்கைகள் எளிதாக்கப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்தினை இப்பகுதிகளில் உள்ள வேளாண் பெருமக்கள் முழுமையாக பயன்படுத்தி தங்களது விளை நிலங்களை மேம்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

இவ்வாய்வின் போது தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் க.இரா.செல்வராஜ் , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சி. விஜயபாபு, செயற்பொறியாளர்கள் அ.அசோகன் , ஆர்.ரவி, உதவி ஆணையாளர் ப.ரமேஷ்பாபு , உதவி செயற்பொறியாளர்கள் எம்.ஆர்.சிபிசக்கரவர்த்தி, எம். செல்வராஜ் , ஊராட்சி அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறையினர் உட்பட பலர் இருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து