கல்லாற்றில் ரூ6.5 கோடியில் உயர்மட்ட மேம்பாலம்; பணிகள் துவங்கஇருக்கிறது: அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி தகவல்

புதன்கிழமை, 7 ஜூன் 2017      வேலூர்

அரக்கோணம் அருகில் கல்லாற்றின் மேல் ரூ6.5 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் விரைவில் அமைப்பதற்கான பணிகள் துவங்க உள்ளது என அரக்கோணம் சு.ரவி எம்எல்ஏ தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்த விவரம் வருமாறு. வேலூர் மாவட்டம், அரக்கோணம் சட்ட மன்ற தொகுதி, கிருஷ்ணாபுரம் ஊராட்சி கிராமத்தில் ரூ5.30 கோடியில் நந்தி ஆற்றின் குறுக்கே 110மீ நீளமுள்ள உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி துவக்க விழாவில் பங்கேற்ற சட்ட மன்ற உறுப்பினர் சு.ரவி அப்பொழுது அவர் கூறியதாவது.

 உயர்மட்ட மேம்பாலம்

அரக்கோணம் சட்ட மன்ற உறுப்பினராக நான் (சு.ரவி) இரண்டாம் முறை பணியாற்றிட மறைந்த முதலமைச்சர் புரட்சிதலைவி அம்மாவின் முழுஆசியுடன்; வாய்ப்பு கிடைத்தது. இதனால் நமது சட்ட மன்ற தொகுதியில் ஐந்து பாலங்கள் வரையில் அமைக்கும் வாய்ப்புகளும்; கிடைத்து அதுநேரத்தில்; ரூ3கோடியில் நின்று போன அரக்கோணம் காஞ்சிபுரம் இடையேயான கல்லாற்று மேம்பாலம் மீண்டும் பணிகள் எடுத்து கொண்ட முயற்சி வீண்போகாமல் ரூ6.5 கோடி வரை நிதி பெற்று இருக்கிறேன் எனவே, அதன் பணிகளும் விரைவில் துவங்க உள்ளது.

, பல எம்எல்ஏ க்கள், எம்பிகள், அரக்கோணத்தில் தேர்ந்தெடுக்கபட்டு பணியாற்றி போதிலும் முடிக்காத பல பணிகள் நிறைவேற்றபட்டு உள்ளது இவை அனைத்தும் மக்களுக்காக என்றும் பணியாற்றும் அம்மாவின் அரசால் மட்டுமே இதுமுடியும். இதே அரக்கோணத்தில் மூன்று முறை சட்ட மன்ற உறுப்பினராக பணியாற்றிய திமுக எம்எல்ஏவின் சொந்த ஊருக்கும் இன்று பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.

எனவே, அரக்கோணம் காஞ்சிபுரம் இடையேயான கல்லாற்று மேம்பாலம் அமைக்கபட்ட பின் போக்குவரத்து தங்கு தடையின்றி அதிகரிக்கும் என நம்புகிறேன் பல மாநிலத்தவர்களும் பாலத்தின் பயனை அடைய போகிறார்கள் என்று கிருஷ்ணாபுரம் பாலம் பணிகள் துவக்க விழாவில் சட்ட மன்ற உறுப்பினர் சு.ரவி இவ்வாறு பேசினார்.

விழாவின் போது எம்பி.ஆரி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைதலைவர் பிரகாஷ், வங்கி தலைவர்கள் ஐயப்பரெட்டி, நாகபுஷணம், அரக்கோணம் ஒன்றியம் முனைவர் ஏஎல்.நாகராஜ், முன்னாள் தலைவர்கள்; ஆனந்தன், ஆசிர்வாதம் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து