வேட்டவலம் அரசு தொடக்கப்பள்ளியில் விலையில்லா பாடப்புத்தகம் உபகரணங்கள்: முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் வழங்கினார்

புதன்கிழமை, 7 ஜூன் 2017      திருவண்ணாமலை
photo04

 

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட வடக்கு அரசு ஆரம்ப பள்ளியில் மாணவர் சேர்க்கை மற்றும் விலையில்லா பாடப்புத்தகம் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்டு முன்னாள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் செல்வமணி மாணவர்களுக்கு உபகரணங்களை வழங்கினார்.

மாணவர் சேர்க்கை

வேட்டவலம் வடக்கு அரசு ஆரம்ப பள்ளியில் மாணவர் சேர்க்கை மற்றும் விலையில்லா பாடப்புத்தகம் வழங்கும் விழா உதவி தொடக்க கல்வி அலுவலர் பி.மோகன் தலைமை நடந்தது.

கிராம கல்விக்குழு தலைவர் திருமூர்த்தி, பள்ளி மேலாண்மைகுழு தலைவர் ஆதிலட்சுமி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் பாலகுணசேகரன் ஆகியோர் முன்னிலை வகிக்க, அனைவரையும் பள்ளி தலைமையாசிரியை இராஜம்மாள் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் செல்வமணி மாணவர்களுக்கு விலையில்லா பாடபுத்தகம், உபகரணங்களை வழங்கினார்.

இதில் ஆசிரியர்கள் பிரான்ஸ் அந்தோனி, சிவகாமி, மேரிசோபியா மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். விழா முடிவில் ஆசிரியை சகாய லூர்துமரி நன்றி கூறினார்.

 

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து