முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜமாபந்தியில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் உத்தரவு

புதன்கிழமை, 7 ஜூன் 2017      கன்னியாகுமரி

கன்னியாகுமரி கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்   தலைமையில், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி நிகழ்ச்சி மூன்றாவது நாளாக  நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில், கிராமக்கணக்குகள் மற்றும் பதிவேடுகள் சரிபார்க்கப்படுவதுடன், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அந்த மனுக்களின் மீது, தனிக்கவனம் செலுத்தப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்படும்.  அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்குட்பட்ட இராஜாக்கமங்கலம் குறுவட்டம், நீண்டகரை பி கிராமம், இராஜாக்கமங்கலம் கிராமம், மதுசூதனபுரம் வடக்கு கிராமம், மதுசூதனபுரம் தெற்கு கிராமம், தர்மபுரம் வடக்கு கிராமம், தர்மபுரம் தெற்கு கிராமம், தர்மபுரம் கிழக்கு கிராமம், பறக்கை கிராமம், தெங்கம்புதூர் கிராமம் மற்றும் புத்தளம் கிராமம் ஆகிய கிராம பகுதி மக்களிடமிருந்து 131 மனுக்கள் பெறப்பட்டது.அதனை தொடர்ந்து, கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்   கிராம கணக்குகள் மற்றும் பதிவேடுகளை ஆய்வு செய்தார்.

 381 கோரிக்கை மனுக்கள்

விளவங்கோடு வட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர்  எஸ்.இளங்கோ  விளவங்கோடு குறுவட்டம், விளவங்கோடு கிராமம், களியக்காவிளை கிராமம், குழித்துறை நகரம், நல்லூர் கிராமம், நட்டாலம் - எ கிராமம், உண்ணாமலைக்கடை கிராமம், நட்டாலம் - பி கிராமம், கொல்லஞ்சி கிராமம், குன்னத்தூர் கிராமம், விளாத்துறை கிராமம் ஆகிய கிராம பகுதி மக்களிடமிருந்து 81 மனுக்களும், கல்குளம் வட்டத்திற்கு பத்மநாபபுரம் வருவாய் கோட்டாட்சியர்  இராஜேந்திரன்  குருந்தன்கோடு குறு வட்டம், குருந்தன்கோடு - எ  கிராமம், குருந்தன்கோடு - பி கிராமம், தலகுளம் கிராமம், திங்கள்நகர் கிராமம், கக்கோட்டுதலை கிராமம், வில்லுக்குறி - எ கிராமம், வில்லுக்குறி - பி கிராமம், வில்லுக்குறி - சி கிராமம், ஆர் - எ கிராமம், ஆர் - பி கிராமம் ஆகிய கிராம பகுதி மக்களிடமிருந்து 77 மனுக்களும், தோவாளை வட்டத்திற்கு நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர்  இரா. ஜானகி  பதப்பாண்டி குறுவட்டம்,  பூதப்பாண்டி கிராமம், சிறமடம் கிராமம், இறச்சகுளம் கிராமம், நாவல்காடு கிராமம், தாழக்குடி கிராமம், ஈசாந்திமங்கலம் வடக்கு கிராமம், ஈசாந்திமங்கலம் தெற்கு கிராமம் ஆகிய கிராம பகுதி மக்களிடமிருந்து 92 மனுக்கள் என மொத்தம் 381 கோரிக்கை மனுக்கள் நடைபெற்ற வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சியில் பெறப்பட்டது.

பலர் பங்கேற்பு

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை)  எம். நிஜாமுதீன், உதவி இயக்குநர் (நில அளவை மற்றும் பதிவேடுகள்)  சையத் முகம்மத், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர்  அருளரசு, தேர்தல் தனி வட்டாட்சியர்   சுப்பிரமணியன், துணை வட்டாட்சியர்  கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து