முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

களக்காடு கோவிலில் தேரோட்டம்

புதன்கிழமை, 7 ஜூன் 2017      திருநெல்வேலி
Image Unavailable

களக்காடு சத்தியவாகீஸ்வரர்&கோமதி அம்மன்   கோவில் வைகாசி திருவிழா கடந்த 29ம் தேதி துவங்கியது.

தேரோட்டம்

இதையட்டி தினசரி பகலில் சிறப்பு            அபிஷேகங்களும், இரவில் வாகனங்களில் சத்தியவாகீஸ்வரர்,  கோமதி அம்மன்     எழுந்தருளி திருவீதி உலா வருதலும் நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட விழா 9ம் திருநாளான     நேற்று (ஜூன் 6ம் தேதி) நடைபெற்றது. மாலை 3&50 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. ரத வீதிகளை சுற்றி வந்து தேர் நிலைக்கு வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதன் பின்னர்  இரவில்    சுவாமி, அம்மன் திருத்தேர் தடம் பார்க்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது.இன்று (7ம் தேதி) தீர்த்தவாரி நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து