முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கைவினை கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் கண்காட்சி: கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் திறந்து வைத்தார்

வியாழக்கிழமை, 8 ஜூன் 2017      கன்னியாகுமரி

கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான்   கைவினை கலைஞர்கள் தயாரிக்கப்பட்ட கைவினை பொருட்கள் கண்காட்சியை   நாகர்கோவில் டி.பி.எஸ் அரங்கத்தில்  ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார்.

 கைவினை பொருட்கள் கண்காட்சி

கன்னியாகுமரி மாவட்டத்தில் 11 சுயஉதவிக் குழுக்களிலுள்ள உறுப்பினர்கள் (பெண்கள்) சுமார் 200 கைவினை கலைஞர்கள் இணைந்து ஆஷா என்ற ஒரு தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார்கள். இந்த தொண்டு நிறுவனமானது சமூக பொருளாதார இயக்கத்தின் வழிகாட்டுதலின் படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சமூக பொருளாதார மேம்பாட்டு இயக்கம் மற்றும் ஆஷா தொண்டு நிறுவனம் இணைந்து, கைவினை கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக பல்வேறு விதமான பயிற்சிகளை நபார்டு மற்றும் கைவினை பொருட்கள் வளர்ச்சி ஆணையரகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வாழ்க்கை தரம் உயரும்

குறிப்பாக, சுய உதவிக்குழுக்களிலுள்ள கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக, நபார்டு வங்கி மூலம் இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.3.45 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கைவினை கலைஞர்களால் தயாரிக்கப்படும் பொருட்களை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யும் வகையில் நாகர்கோவிலுள்ள டி.பி.எஸ் அரங்கத்தில் விற்பனை மற்றும் கண்காட்சிக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில் கையால் எம்ராய்டிங் செய்தப் பொருட்கள், பலவகையான பழச்சாறு வகைகள், விதைகள் மற்றும் காய்கறிகள் மூலம் தயாரிக்கப்படும் பொருட்கள், பலவகையான காளான்கள்,  ஜவுளி பொருட்கள், பலவகையான மசாலா பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு நேரடி விற்பனைக்கு வைக்கப்படுகிறது.

பலர் பங்கேற்பு

இந்நிகழ்ச்சியில், நபார்டு வங்கி உதவி மேலாளர் மார்டின் பிரகாசம், உதவி இயக்குநர் (கைவினை பொருட்கள்) பாலு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தலைமை மண்டல மேலாளர் புருசோதமன், நாகர்கோவில் நகர சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் கீதன், சமூக பொருளாதார மேம்பாட்டு இயக்கத்தின் இயக்குநர் ஆஸிர் பாக்கிய சிங், ஆஷா நிறுவனத்தின் செயலாளர் ஏ.மேரிபுஷ்பராணி, இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து