முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி மாணவிகளுக்கு, விலையில்லா பாடநூல், நோட்டுபுத்தகம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் வழங்கினார்

வியாழக்கிழமை, 8 ஜூன் 2017      விழுப்புரம்
Image Unavailable

விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி கல்வித்துறை சார்பாக பள்ளி மாணவிகளுக்கு, பள்ளி முதல் நாளான  விலையில்லா பாடநூல், நோட்டுபுத்தகம், விலையில்லா சீருடை, வரைபடக் கருவிகள் ஆகியவற்றை கலெக்டர் இல.சுப்பிரமணியன், வழங்கினார்.விலையில்லா பாடநூல், நோட்டு புத்தகங்களை வழங்கி, கலெக்டர் இல.சுப்பிரமணியன், விழாப்பேருரையாற்றினார்:

 சீருடைகள்,நோட்டு புத்தகம்

விழுப்புரம் மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை 2,456 அரசு மற்றும் அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 4,06,241 மாணவ மாணவியர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா பாடநூல், நோட்டுபுத்தகம் 4,06,241 மாணவ மாணவியர்களுக்கும், விலையில்லா சீருடை (1 முதல் 8ஆம் வகுப்பு வரை) 2,99,882 மாணவ மாணவியர்களுக்கும், வரைபடக்கருவி (7ஆம் வகுப்பு) 76,000 மாணவ மாணவியர்களுக்கும் பள்ளி திறக்கும் நாளான  இன்றே அனைத்து பள்ளிகளுக்கும் வழங்க மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மட்டும் விலையில்லா பாடநூல் மற்றும் நோட்டுபுத்தகம் 3,600 மாணவிகளுக்கும், விலையில்லா சீருடை 800 மாணவிகளுக்கும், வரைபடக்கருவி 250 மாணவிகளுக்கும் வழங்கப்படுகிறது.

அரசு நடவடிக்கை

இன்றைய தினம் மாணவிகள் அடுத்த வகுப்பிற்கு மிக ஆர்வமுடன் வந்திருக்கிறீர்கள் என்பதை உங்களை பார்க்கும் போதே தெரிகிறது.  நீங்கள் படிக்க வேண்டும் என்பதற்காக பள்ளி திறந்த முதல் நாளிலேயே உங்களுக்குத் தேவையான பாடநூல், நோட்டுபுத்தகம், சீருடை ஆகிய அனைத்தையுமே வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.  இதற்குக் காரணம் தமிழகத்தை கல்வியில் முதன்மை மாநிலமாக கொண்டுவர வேண்டும் என்பதுதான்.  இதனை நீங்கள் உணர்ந்து கொண்டு, உங்கள் பெற்றோரின் பொருளாதாரச் சூழலை கருத்தில் கொண்டு, நன்றாக படிக்க வேண்டும்.

பெருமை சேர்க்க வேண்டும்

இப்பள்ளி, கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 93 சதவிகிதமும், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 87.7 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளது. இத்தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 3.7 சதவிகிதம் அதிகமாகும்.  இக்கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்று, இப்பள்ளிக்கு பெருமை சேர்க்க வேண்டுமென கலெக்டர் இல.சுப்பிரமணியன், தெரிவித்தார்.

பலர் பங்கேற்பு

இந்நிகழ்ச்சியில், முதன்மைக் கல்வி அலுவலர் ஜோ.ஆஞ்சலோ இருதயசாமி, விழுப்புரம் மாவட்ட கல்வி அலுவலர் (பொ) சுந்தரபாண்டியன், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ராஜேந்திரன், தலைமையாசிரியர் சுசீலா, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து