முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவியர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடைகள் அ.விஜயகுமார் எம்.பி. வழங்கினார்

வியாழக்கிழமை, 8 ஜூன் 2017      கன்னியாகுமரி
Image Unavailable

மாநிலங்களவை உறுப்பினர் அ.விஜயகுமார் , பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடைகள், புத்தகப்பை மற்றும் நோட்டுப்புத்தகங்களை, நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப் பள்ளியில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கி, தெரிவித்ததாவது:-               

 பல்வேறு  திட்டங்கள்

மறைந்தும், மறையாமலும் மக்கள் மனதில் நிரந்தரமாக வாழ்ந்துக் கொண்டிருக்கும்,  அம்மா , பள்ளி கல்வித்துறையின் மூலம்  மாணவ, மாணவியர்களின்   கல்வித்திறனை மேம்படுத்துவதற்காக பல்வேறு  திட்டங்களை அறிவித்து, சிறப்பாக செயல்படுத்தி வந்தார்கள். குறிப்பாக, தனியார் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களின் கல்விக்கு இணையாக, அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களின் கல்வி சிறந்து விளங்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார்கள்.

விலையில்லாமல் வழங்கி

மேலும்,  அம்மா  வீட்டின் அருகிலிருந்து பள்ளிக்கு செல்ல ஏதுவாக, இலவச பேரூந்து பயண அட்டைகள், விலையில்லா சீருடைகள், விலையில்லா நோட்டுப்புத்தகங்கள், பாடப்புத்தகங்கள், விலையில்லா புத்தகப்பை, விலையில்லா மடிக்கணினிகள் மற்றும் விலையில்லா மிதிவண்டிகள் போன்ற பல்வேறு கல்வி உபகரணங்கள் பள்ளி கல்வித்துறையின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, பள்ளி மாணவ, மாணவியர்களாகிய நீங்கள் தமிழக அரசின் திட்டத்தினை முழுமையாக பெற்று, வாழ்வில் முன்னேற வேண்டும். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உரிய மரியாதை வழங்கிட வேண்டும். ஒரு மாணவனின் ஒழுக்கம் தான், அவர்களது வாழ்வில் சிறந்த நிலையை அடைய உறுதுணையாக இருக்கும். 

கல்வி உபகரணங்கள்

மேலும், பள்ளி திறக்கும் நாளன்று, மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா கல்வி உதவி உபகரணங்களை வழங்கிட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அவ்வகையில், நாகர்கோவில் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 1,600 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடைகள், புத்தகப்பை மற்றும் நோட்டுப்புத்தகங்கள் இன்று வழங்கப்படுகிறது என தெரிவித்தார்.பின்னர், மாநிலங்களவை உறுப்பினர் அ.விஜயகுமார் , 25 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடைகள், புத்தகப்பை மற்றும் நோட்டுப்புத்தகங்கள் வழங்கினார்.

பலர் பங்கேற்பு

இந்நிகழ்ச்சியில், எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சி.விஜயன், உதவி தலைமை ஆசிரியர் பீர் முகம்மது, நாஞ்சில் சந்திரன், கனகராஜன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து