முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடநூல் கலெக்டர் என்.வெங்கடேஷ் வழங்கினார்

வியாழக்கிழமை, 8 ஜூன் 2017      தூத்துக்குடி
Image Unavailable

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் மூலம் 84 அரசு பள்ளிகள், 131 அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் 2,40,298 மாணவ, மாணவியர்களுக்கு 2017 - 2018 கல்வி ஆண்டிற்கான விலையில்லா பாடநூல், பாடகுறிப்பேடு மற்றும் சீருடைகள் வழங்கப்பட உள்ளது. இதன் துவக்கமாக தூத்துக்குடி சி.வ.அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் கலெக்டர் என்.வெங்கடேஷ் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா பாடநூல், பாடகுறிப்பேடு மற்றும் சீருடைகளை வழங்கி தெரிவித்ததாவது:

 மாணவர்களின் நலனில் அக்கறை

தமிழ்நாடு அரசு மாணவ-மாணவிகள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு பல சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள மாணவ, மாணவிகளின் கல்வி அறிவை உலக தரத்தில் மேம்படுத்தும் நோக்கத்தில் கல்விக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்து படிப்பிற்கு மட்டும் அல்ல படிக்கும் போதே வேலை வாய்ப்புக்களையும் ஏற்படுத்தி அரசு வேலை வாய்ப்பிற்கு மட்டும் காத்திருக்காமல் படித்தவுடன் வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்மினை மாநிலம் முழுவதும் நடத்தி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி அரசு பணி மற்றம் உள்ளாட்சி அமைப்புக்களில் மாணவ, மாணவிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

உழைக்க வேண்டும்

மேலும், மாணவ-மாணவியர்களின் இடைநிற்றலை தடுக்கும் பொருட்டு கல்வி உதவித்தொகை, விலையில்லா மிதிவண்டி என பல்வேறு வகையான உதவிகளை தமிழ்நாடு அரசு வழங்கி வருகின்றது. மாணவ, மாணவியர்களாகிய நீங்கள் படிப்பில் மட்டுமில்லாமல் விளையாட்டிலும் அதிகம் கவனம் செலுத்தி உங்களது உடற்தகுதி திறமைகளை வளர்த்து விளையாட்டுத்துறையிலும் அதிக சாதனைகளை புரிந்து நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும். இனிவரும் கல்வியாண்டில் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கல்வியில் முதன்மை மாவட்டமாக திகழ மாணவ, மாணவியர்களாகிய நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும் அதற்கான வாக்குறுதியை எங்களுக்கு அளிக்க வேண்டும் என கலெக்டர் கலெக்டர் என்.வெங்கடேஷ் தெரிவித்தார்கள்.

பலர் பங்கேற்பு

இந்நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலர் அனிதா, தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் செந்தூர்கனி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் சங்கரய்யா, சீனிவாசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவாஸ்கான், சி.வ. அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் செந்தூர்கனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து