முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயக் கணக்கு முடிக்கும் நிகழ்ச்சி : கலெக்டர் முனைவர் சுரேஷ்குமார் மனுக்களை பெற்றார்

வியாழக்கிழமை, 8 ஜூன் 2017      நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 1426 ம் பசலி ஆண்டிற்கான இரயத்துவாரி இனாம், மைனர் இனாம்(அரசால் எடுத்துக்கொள்ளப்பட்டவை உட்பட) கிராமங்களில் வருவாய் தீர்வாயக் கணக்கு முடிக்கும் நிகழ்ச்சி ஆண்டுக்கு ஒருமுறை தொடங்கி நடைபெறும். இந்த ஆண்டிற்கான கணக்கு முடிக்கும் நிகழ்ச்சி மாவட்டம் முழுவதும் 08.06.2017 தொடங்கி 23.06.2017 வரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு நாளும் காலை 10.00 மணி முதல் வருவாய்த் தீர்வாயக் கணக்கு முடிக்கும் நிகழ்ச்சி தொடங்கி நடைபெறும்.

கோரிக்கை மனுக்கள்

நேற்றைய தினம் (08.06.2017)திருக்குவளை வருவாய் வட்டத்திற்குட்பட்ட கிராமங்களுக்கான வருவாய் தீர்வாய கணக்கு முடிக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் முனைவர் சீ.சுரேஷ்குமார், வருவாய்த் தீர்வாய அலுவலராக பங்கேற்று திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார். இன்று திருக்குவளை வட்டத்திற்குட்பட்ட தென்மருதூர், ஆதமங்கலம், கொடியாலத்தூர், பாங்கல், பனங்காடி, கொளப்பாடு, காருகுடி, வலிவலம், அணக்குடி, வடக்குப் பனையூர், தெற்குப் பனையூர் ஆகிய கிராமங்களுக்கான கணக்கு முடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பட்டா மாறுதல், வீட்டுமனைப் பட்டா, பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 97 மனுக்களை மாவட்ட கலெக்டர் அவர்களிடம் அளித்தனர். அவற்றில் நேற்று பெறப்பட்ட 15 மனுக்கள் மற்றும் இன்று பெறப்பட்ட 9 மனுக்கள் என 24 மனுக்களுக்கு உடனடி தீர்வை மாவட்ட கலெக்டர் வழங்கினார். எஞ்சிய மனுக்களை பரிசீலனை செய்ய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பொதுமக்களின் மனுக்களை உடனடியாக பரிசீலித்த மாவட்ட கலெக்டர் தகுதி வாய்ந்த நபர்களுக்கு உரிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சமூகப்பாதுகாப்புத் திட்டம் சார்பில் 3 நபர்களுக்கு இயற்கை மரண ஈமச்சடங்கு உதவித் தொகையும், 4 நபர்களுக்கு உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் திருமண நிதியுதவியும், 4 பயனாளிகளுக்கு இலவச பட்டாவும், 9 பயனாளிகளுக்கு பட்டா மாறுதலும், 3 பயனாளிகளுக்கு பட்டா நகல்களையும், 1 பயனாளிக்கு குடும்ப அட்டையில் பெயர் திருத்தத்திற்கான ஆணையும் மாவட்ட கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அலுவலக தலைமை கண்காணிப்பாளர் திரு,பரிமளம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், திருக்குவளை வட்டாட்சியர் சுதாராணி, அரசு அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து