முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி மாவட்டத்தில் 5 லட்சத்து 17 ஆயிரத்து 072 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா பாட நூல்கள் : கலெக்டர் கு.ராசாமணி தகவல்

வியாழக்கிழமை, 8 ஜூன் 2017      திருச்சி

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வரும் 2017-2018ஆம் கல்வி ஆண்டில் 1664 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 5 இலட்சத்து 17 ஆயிரத்து 072 மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி தொடங்கி ஒரு மணி நேரத்தில் 100 சதவீதம் விலையில்லா பாட நூல்கள், குறிப்பேடுகள், மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் கு.இராசாமணி, தெரிவித்துள்ளார்.

 பாடபுத்தகங்கள்

இது குறித்து மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது: தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தபடி நேற்று (07.06.2017) திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு நேற்றே அனைத்து பாடப்புத்தகங்களும் மாணவ, மாணவியர்களுக்கு ஒரு மணி நேரத்தில் 100 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. மே மாதம் முதல் தமிழக அரசு பாடநூல்கள் நிறுவனம் மூலமாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பயிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பாடநூல்கள், பாட குறிப்பேடுகள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் திருச்சி, முசிறி, இலால்குடி கல்வி மாவட்ட அலுவலர்கள் மற்றும் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மூலமாக ஒவ்வொரு பள்ளிக்கும் நேரிடையாகவே விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு செய்யப்பட்டுள்ளதால் மாணவ, மாணவியர்களுக்கு காலதாமதம் இல்லாமல் பள்ளி திறக்கும் நாளன்றே பாடநூல்கள் மற்றும் சீருடைகள் கிடைக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.

அரசு தொடக்கப் பள்ளிகள் 853 மற்றும் உதவி பெறும் தொடக்கப் பள்ளிகள் 183, அரசு நடுநிலைப் பள்ளிகள் 220 மற்றும் உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகள் 87 ஆக மொத்தம் 1343 பள்ளிகளில் பயிலும் 3 இலட்சத்து 13 ஆயிரத்து 131 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா பாடநூல்கள் வழங்கப்பட்டுள்ளன. அரசு உயர்நிலைப் பள்ளிகள் 92, அரசு மேல்நிலைப் பள்ளிகள் 82 அரசு, அரசு உதவிபெறும் உயர்நிலைபள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் இதர பள்ளிகள் 147, மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி 1, நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் 5, அரசு ஆதிதிராவிட நலத்துறை உயர்நிலைப் பள்ளிகள் 16, அரசு ஆதி திராவிட நலத்துறை மேல்நிலைப் பள்ளிகள் 16, சமூக நலத்துறை பள்ளிகள் 1, உண்டு உறைவிடப் பள்ளிகள் 3 ஆக மொத்தம் 363 பள்ளிகளில் பயிலும் 2 இலட்சத்து 3 ஆயிரத்து 941 மாணவ, மாணவியர்களுக்கு பாடநூல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 79 ஆயிரத்து 189 மாணவ, மாணவியர்களுக்கு பாடநூல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆக மொத்தம் 4 இலட்சத்து 80 ஆயிரத்து 246 மாணவ, மாணவியர்களுக்கு இன்றைய நாளில் பாடநூல்கள் வழங்கப்பட்டுள்ளது. தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த 1 இலட்சத்து 22 ஆயிரத்து 160 மாணவ, மாணவியர்களுக்கும் மற்றும் அரசு, அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 1 இலட்சத்து 33 ஆயிரத்து 743 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா பாடகுறிப்பேடுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 1ஆம் வகுப்பிலிருந்து 8ஆம் வகுப்பு வரை சத்துணவு பயிலும் 49 ஆயிரத்து 249 மாணவ, மாணவியர்களுக்கு முதல் செட் சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு மாவட்ட கலெக்டர் கு.இராசாமணி, தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து