முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மரக்காணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் ரூ.6,66,900- மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் கலெக்டர் இல.சுப்பிரமணியன் வழங்கினார்

வியாழக்கிழமை, 8 ஜூன் 2017      விழுப்புரம்
Image Unavailable

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற (07.06.2017) 1426-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சியில் 58 பயனாளிகளுக்கு ரூ.6,66,900- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் இல.சுப்பிரமணியன் வழங்கினார்.பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி கலெக்டர் இல.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது:

 988 மனுக்கள் பரிசீலனை

இந்த வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சியில் 01.06.2017 முதல் 07.06.2017 வரை 1032 மனுக்கள் வரப்பெற்றுள்ளன.  இதில் 44 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.  மீதமுள்ள 988 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.  இதில் அதிக மனுக்கள் பட்டா உட்பிரிவு கோரியே வந்துள்ளது.  மேலும், நீர்த்தேக்கப் பகுதிகளில் பட்டா மாற்றம் கோரி மனு செய்துள்ளனர்.  நீர்த்தேக்கப் பகுதிகளில் பட்டா வழங்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.  எனவே, இம்மனுக்களுக்கு மாற்று ஏற்பாடு செய்ய மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நலத்திட்ட உதவிகள்

வருவாய் தீர்வாயத்தில் மட்டும் வருவாய்த்துறையின் மூலம் விபத்து மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகையாக 4 நபர்களுக்கு தலா ரூ.1,02,500-ம், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகையாக 5 நபர்களுக்கு தலா ரூ.12,500-ம், சமூக நலத்துறை சார்பாக 9 மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மாதந்தோறும் ரூ.1,000- பெறுவதற்கான ஆணையும், ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் 3 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரமும், 8 பயனாளிகளுக்கு பட்டா மாற்றம் (உட்பிரிவு), 3 பயனாளிகளுக்கு பட்டா மாற்றம் (முழுபுலன்), 5 பயனாளிகளுக்கு பட்டா மாற்றம் (முழுபுலன்) நத்தம், பட்டா மாற்றம் நத்தம் பட்டா நகல் 1 பயனாளிக்கும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின்கீழ் மதிய உணவு சமைத்து வழங்கிட ரூ.10,000- மதிப்பீட்டில் சமையல் உபகரங்கள் 5 நபர்களுக்கும், வேளாண்மைத்துறையின் சார்பாக 10 நபர்களுக்கு ரூ.2,400- மதிப்பீட்டில் தென்னங்கன்றுகள், 5 நபர்களுக்கு ரூ.1,58,000- மதிப்பீட்டில் தெளிப்பு நீர் பாசன உபகரங்களும் என மொத்தம் 58 பயனாளிகளுக்கு ரூ.6,66,900- மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டுள்ளன.

பயன்பெறலாம்

பொதுமக்கள் அரசின் நலத்திட்ட உதவிகள் வேண்டி, அரசு அலுவலகங்களுக்கு செல்லும்போது, ஏற்படும் சிரமங்களை போக்குவதற்காக, தமிழக அரசு வருடத்திற்கு ஒருமுறை இதுபோன்ற ஜமாபந்தி நிகழ்ச்சியினை நடத்தி வருகிறது.  இப்பகுதியுள்ள அனைத்து மக்களுக்கு இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெற்றிருப்பீர்கள் என நான் நம்புகிறேன்.  மேலும், இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலாதவர்கள், தங்களது கோரிக்கை மனுக்களை வாரந்திர குறைதீர்ப்பு நாள், மக்கள் தொடர்பு முகாம் ஆகியவற்றில் கொடுத்து பயன்பெறலாம் என கலெக்டர் இல.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

பலர் பங்கேற்பு

இந்நிகழ்ச்சியில், நில அளவை உதவி இயக்குநர் சண்முகம், கலெக்டர் அலுவலக மேலாளர் பார்த்தசாரதி, மரக்காணம் வட்டாட்சியர் சீனுவாசன், சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் ஜோதிவேல், ஆதிதிராவிடர் தனி வட்டாட்சியர் தனலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானவேல் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து