நல்லாண்பிள்ளைபெற்றாள் திருவேங்கடமுடையான் திருக்கோயிலில் கருடசேவை விழா

வியாழக்கிழமை, 8 ஜூன் 2017      விழுப்புரம்
senji karuda sevai 2017 0 08

செஞ்சி வட்டம், நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமம் அருள்மிகு திருவேங்கடமுடையான் கோயிலில் ஸ்ரீ வைணவ மகாசபை சார்பாக 11ம் ஆண்டு ஸ்ரீ கருடசேவை விழா புதன் அன்று நடைபெற்றது.

 சிறப்பு திருமஞ்சனம்

 காலை 6.00 மணி அளவில் ஸ்ரீபூதேவி, ஸ்ரீதேவி சமேதர் திருவேங்கடமுடையானுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.  தொடர்ந்து 8.00 மணி அளவில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ கருட வாகனத்தில் திருவேங்கடமுடையான் திருவீதி உலா நடைபெற்றது.  வீதியுலாவை பின் தொடர்ந்து திவ்யபிரபந்த பஜனைக் குழுவினர் பாசுரங்களை சேவித்தபடி வந்தனர். நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பலர் பங்கேற்பு

நிகழ்ச்சிக்கு பெருமாள் செட்டியார் தலைமை தாங்கினார்.  முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்  தலைவர் அஞ்சுகம்நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ வைணவ மகாசபை பொறுப்பாளர்கள் சேகர், அறிவழகன், கதிரவன், நெடுஞ்செழியன்,அண்ணாதுரை, பாண்டியன், பச்சையப்பன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து