63 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 3 இலட்சத்து 14 ஆயிரத்திற்கான மதிப்பில் பல்வேறு நலத்திட்டங்களை ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா.பெஞ்சமின் வழங்கினார்

வியாழக்கிழமை, 8 ஜூன் 2017      திருவள்ளூர்
Thiruvallur 2017 06 08

திருவள்ளுர் வரதராஜபுரம் பெரியகுப்பத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பெஞ்சமின் 63 மாற்றத்திறனாளிகளுக்கு ரூ. 3 இலட்சத்து 14 ஆயிரத்து 400 மதிப்பிலான பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சிறப்பு சக்கர நாற்காலிகள் மற்றும் பிரெய்லி கை கடிகாரங்களை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் ஊரக தொழில்துறை அமைச்சர் பேசியதாவது:

நலத்திட்டங்கள்

அம்மா வழிகாட்டுதலின்படியும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நடைபெற்று வரும் நல்லாட்சியில் மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை அறிந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அதில் ஒரு பகுதியாக இன்று முதுகு தண்டுவடம், நரம்பு உறை தேய்வு நோய் மற்றும் தண்டுவட குறைபாடு நோயினால் பாதிக்கப்பட்ட 13 மாற்றத்திறனாளிகளுக்கு ரூ. 2 இலட்சத்து 60 ஆயிரம் மதிப்பில்; பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சிறப்பு சக்கர நாற்காலிகள் மற்றும் 50 பார்வையற்றவர்களுக்கு ரூ. 54 ஆயிரத்து 400-க்கான மதிப்பீட்டில் பிரெய்லி கை கடிகாரங்களை வழங்கப்பட்டுள்ளது. இது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்". மேலும், மாண்புமிகு வழிகாட்டுதலின்படியும் தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் தலைமையிலான அரசு எப்பொழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கு உறுதுணையாக இருக்கும் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்று பேசினார்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லி தலைமை வகித்தார். பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பி.பலராமன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் எஸ்.ஜெயச்சந்திரன், திருவள்ளுர் வருவாய் கோட்டாட்சியர் கெ.ரா.திவ்யஸ்ரீ,திருவள்ளுர் மாவட்ட மொத்த கூட்டுறவு தலைவர் ஜி.கந்தசாமி,வட்டாட்சியர் கார்குழலி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து