முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கும்மிடிப்பூண்டி ஜமாபந்தியில் 252 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

வியாழக்கிழமை, 8 ஜூன் 2017      சென்னை
Image Unavailable

கும்மிடிப்பூண்டியில் கடந்த மே-26 முதல் ஜூன்-7 வரை 7 நாட்கள் நடைபெற்ற ஜமாபந்தியின் இறுதி நாளான புதன்கிழமை நடைபெற்ற விழாவில் 252 பயனாளிகளுக்கு ஜமாபந்தி தீர்வாய தலைவர் மாவட்ட வருவாய் அலுவலர் கே.முத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

சான்றிதழ்கள்

கும்மிடிப்பூண்டி வட்டத்திற்கான ஜமாபந்தி கடந்த மே-26ஆம் தேதி துவங்கி மே-30, மே-31, ஜூன்-1, ஜூன்-2, ஜூன்-6, ஜூன்-7 ஆகிய 7 நாட்கள் நடைபெற்றது. இந்த 7 நாள் ஜமாபந்தியில் பட்டா மாற்றம் தொடர்பாக 712 மனுக்களும், வீட்டு மனை பட்டா கேட்டு 114 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டத்தில் 163 மனுக்களும், இதர மனுக்கள் 38, வட்டார வளர்ச்சி அலுவலகம் தொடர்பாக 6 மனுக்கள், மின்வாரிய துறை தொடர்பாக 6 மனுக்கள் என 1039 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது. இந்த மனுக்களில் 228 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. 58 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 753 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது.

தொடர்ந்து இறுதி நாள் நிகழ்வில் நடைபெற்ற விழாவிற்கு மாவட்ட வருவாய்அ லுவலர் கே.முத்து தலைமை தாங்கினார். கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ஸ்ரீதரன், தனி வட்டாட்சியர் சித்ரா, மண்டல துணை வட்டாட்சியர் அருள் வளவன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் மணிகண்டன், வட்ட வழங்கல் அலுவலர் சித்ரா முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து விழாவில் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் கல்வி உதவி தொகையாக 66 பயனாளிகளுக்கு ரூபாய் 1லட்சத்து 44ஆயிரத்து 500 ரூபாய், உழவர் பாதுகாப்பு திட்டத்தில் இயற்கை மரண உதவித் தொகையாக 8 பேருக்கு ரூபாய் 1 லட்சத்து 60ஆயிரம் ரூபாயும், கும்மிடிப்பூண்டி பெத்திக்குப்பத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த 20 பேரின் குடும்பத்தினருக்கு ஈமக்கிரியை உதவித் தொகையாக 1 லட்சம் ரூபாயும் என 94 பயனாளிகளுக்கு ரூபாய் 4 லட்சத்து 4 ஆயிரத்து 500 ரூபாய்ம திப்பிலான காசோலைகள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து 152 பயனாளிகளுக்கு பட்டாவும், 4 பேருக்கு சிறுவிவசாயிகளுக்கான சான்றும், தலா ஒருவருக்கு பிறப்பு மற்றும் இறப்பு சான்றும் வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து