முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வண்டல் மண் வழங்கும் பணி: கலெக்டர் கே.விவேகானந்தன் நேரில் ஆய்வு

வியாழக்கிழமை, 8 ஜூன் 2017      தர்மபுரி
Image Unavailable

 

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தோக்கம்பட்டி மற்றும் நார்த்தம்பட்டி ஆகிய ஏரிகளில் விவசாய நில மண் வளப்படுத்தும் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வண்டல் மண் வழங்கும் பணியினை கலெக்டர் கே.விவேகானந்தன், நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் நல்லம்பள்ளி வட்டாட்சியர் (பொ) ரேவதி கலந்து கொண்டார்.

கலெக்டர் ஆய்வு

 

அப்போது விவசாயிகள் கலெக்டரிடம் தெரிவித்ததாவது :- மஞ்சள், வெற்றிலை, பருத்தி, துவரை, உளுந்து மற்றும் மாட்டுத் தீவனம் உள்ளிட்ட பயிர்களை வண்டல் மண்ணை பயன்படுத்தி பயிர் செய்தால் இருமடங்கு மகசூல் கிடைப்பதுடன் விவசாய நிலத்தில் மண் வளமும் காக்கப்படுகிறது. வருவாய்த்துறையில் விண்ணப்பித்தவுடன் வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் வண்டல் மண் எடுக்க விண்ணப்பித்தால் உடனடியாக ஆணை வழங்கப்படும் என கலெக்டர் கே.விவேகானந்தன், விவசாயிகளிடம் தெரிவித்தார்.

எனவே தருமபுரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், மண் பாண்ட தொழிலாளர்கள், வருவாய்த்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்களை அணுகி வண்டல் மண் எடுக்க விண்ணப்பித்து பயன்பெறுமாறு கலெக்டர் கே.விவேகானந்தன், கேட்டுக்கொண்டார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து