திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவராக டாக்டர். கே.எஸ்.பழனிசாமி பொறுப்பேற்றுக் கொண்டார்.

வியாழக்கிழமை, 8 ஜூன் 2017      திருப்பூர்
30s

திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில், திருப்பூர் மாவட்ட புதிய  ஆட்சித்தலைவராக டாக்டர் கே.எஸ். பழனிசாமி பொறுப்பேற்றுக் கொண்டார்.

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அவர்களின் பணி விபரங்கள் கால்நடை மருத்துவ படிப்பில் முதுகலை  பட்டம் பெற்றுள்ளார். பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியராகவும், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராகவும் (பொது), சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலராகவும், சேலம் மாநகராட்சி ஆணையராகவும், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் இயக்குநராகவும் பணியாற்றி உள்ளார்.

2011-ம் ஆண்டு முதல் 2014 டிசம்பர் வரை தேனி மாவட்ட  ஆட்சித்தலைவராகவும் மற்றும் 2014 டிசம்பர் 29 -ம் தேதி முதல் 2017 ஜுன் வரை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.  2017 ஜுன் 8-ம் தேதி முதல் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து