முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனவளத்திட்டங்கள் குறித்து மத்திய அரசு செயலாளர் தேவேந்திர சௌத்ரி நேரில் ஆய்வு செய்தார்

வியாழக்கிழமை, 8 ஜூன் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,-ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்கள் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் மீனவர் நலத்திட்டங்கள் குறித்து மத்திய அரசு செயலாளர் தேவேந்திர சௌத்ரி நேரில் ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்த மத்திய அரசு செயலாளர் (கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை) தேவேந்திர சௌத்ரி, தமிழ்நாடு அரசு மீனவர்கள் நலனுக்காக செயல்படுத்தி வரும் பல்வேறு மீனவர் நலத்திட்டங்கள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு கள ஆய்வு செய்தார்.  இந்த ஆய்வின் போது, தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை இயக்குநர் வி.பி.தண்டபாணி, அவர்கள், மாவட்ட கலெக்டர் முனைவர் ச.நடராஜன் உட்பட மீன்வளத்துறை சார்ந்த உயர் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
மத்திய அரசு செயலாளர் (கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை) தேவேந்திர சௌத்ரி,  ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்திலுள்ள மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தில் கடல்வாழ் மீன்கள் குறித்த கருத்தரங்கினை துவக்கி வைப்பதற்காக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். அப்போது தங்கச்சிமடம், மண்டபம் ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு அரசு மீன்வளத்துறையின் மூலம் செயல்படுத்தி வரும் பல்வேறு மீனவர்கள் நலத்திட்டங்கள் குறித்து நேரடியாகச் சென்று களஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு அரசு, கடல் நீரில் கூண்டுகள் மூலம் தரமான மீன் வளர்ப்பினை ஊக்குவித்திடும் விதமாக உலக வங்கி நிதியுதவியுடன் தலா ரூ.5 லட்சம் மதிப்பில் மீனவர்களுக்கு 10 கூண்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கூண்டுகளின் மூலம் மீனவர்கள் கடல் விரால், பாறை, களவா, சிங்கி உள்ளிட்ட மீன வகைகளை வளர்த்து பயன் பெற்று வருகின்றனர். தங்கச்சிமடம் பகுதியில் தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை உதவியுடனும், மண்டபம் பகுதியில் மண்டபத்திலுள்ள மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம் உதவியுடனும் மீனவர்கள் மூலம் மீன் கூண்டுகளில் மீன் வளர்க்கும் பணிகளை  மத்திய அரசு செயலாளர் (கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை) தேவேந்திர சௌத்ரி நேரில் சென்று கள ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, கடல்பாசி வளர்ப்பினை ஊக்குவித்திடும் வகையில் உலக வங்கி நிதியுதவியுடன் மீனவர்களுக்கு கடல்பாசி வளர்ப்பிற்கான மிதவைகள் வழங்கப்பட்டு, பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன. மண்டபம் பகுதியில் மீனவர்கள் மூலம் வளர்க்கப்பட்டு வரும் கடல்பாசிகளையும் மத்திய அரசு செயலாளர் நேரில் ஆய்வு செய்தார். அதன்பின்பு, மண்டபத்திலுள்ள மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்திற்கு நேரடியாகச் சென்று, ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள மீன் குஞ்சு பொறிப்பகம், ஆய்வகம் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப முறைகள் குறித்தும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளின் போது, மத்திய அரசு மீன்வளத்துறை இணைச் செயலாளர் ஆதித்யா ஜோஷி, தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை கூடுதல் இயக்குநர்கள் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன்,(ராமநாதபுரம்) பி.மோகனசுந்தரம் (சென்னை), கே.ரங்கராஜ் (சென்னை),மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய இயக்குநர் ஏ.கோபால கிருஷ்ணன், தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை துணை இயக்குநர் ஐசக் ஜெயக்குமார், சி.எம்.எப்.ஆர்.ஐ ஆராய்ச்சியாளர்கள் கே.கே.பிலிப்போஸ், இமல்டா ஜோசப், அப்துல் நாசர் உட்பட மீன்வளத்துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து