முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பால் தரப்பரிசோதனை -மதுரை கலெக்டர் வீர ராகவராவ் முன்னிலையில் நடைபெற்றது

வியாழக்கிழமை, 8 ஜூன் 2017      மதுரை
Image Unavailable

மதுரை -மதுரை கோ.புதூர் அரசுப்பேருந்து பணிமனை எதிரில் பொதுமக்கள் பயன்படுத்தும் பாலில் கலப்படம் ஏதும் உள்ளதா என்பதை அறிவதற்காக உணவுப்பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் சார்பில் தரப்பரிசோதனை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ்  முன்னிலையில்  நடைபெற்றது.
 இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்ததாவது:
 பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்தும் பாலின் தரத்தையும், கலப்படம் ஏதும் உள்ளதா என்பதையும் அறிவதற்கு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திட, மாவட்டத்தில் மதுரை மாநகரில் இன்று (08.06.2017) நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து வருகின்ற 12.06.2017 அன்று மேலூரிலும், 14.06.2017 அன்று வாடிப்பட்டியிலும், 16.06.2017 அன்று திருமங்கலத்திலும் மற்றும் 19.06.2017 அன்று உசிலம்பட்டி பகுதிகளிலும் பால் தரப்பரிசோதனை நடத்தப்படவுள்ளது. 
 இதில் பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் பாலில் 300 மி.லி அளவிற்கு எடுத்து வந்து கொடுத்து தரப்பரிசோதனை செய்து கொள்ளலாம்.  இதில் பாலில் உள்ள கொழுப்பு, அடர்த்தி, வேதிப்பொருள் கலப்படம் குறித்து பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் தெரிவிக்கப்படும்.  பாலில் கலப்படம் இருப்பது தெரியவந்தால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். 
 மாவட்டத்தில் உணவு வியாபாரம் செய்யும் 23650 தனியார்கள் மற்றும் 3707 அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் என 27357 உணவு பண்டங்கள் விற்பனையாளர்கள் உள்ளனர்.  2011 முதல் 2016 வரை 340 நபர்களிடமிருந்து பால் தரப்பரிசோதனைகள் செய்யப்பட்டு 56 சிவில் வழக்குகளும், 31 குற்றவியல் வழக்குகளும் பதியப்பட்டு ரூ.6,69,000 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.  இந்த ஆண்டு இதுவரை 48 பால் மாதிரிகள் தரப்பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
 இந்த பணியில் மாவட்ட உணவுப்பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக அலுவலர்கள் முன்னிலையில் 26 களப்பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.  பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பாலின் தரத்தினை பரிசோதனை செய்து அறிந்து கொள்ளலாம் என தெரிவித்தார்.
 இந்நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மரு.லட்சுமிநாராயணன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.அர்ஜுன், நகர்நல அலுவலர் மரு.சதீஷ்ராகவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து