முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரும்பு டன் ஒன்றுக்கு விலை 3,500 ஆக உயர்த்த வேண்டும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி

வியாழக்கிழமை, 8 ஜூன் 2017      விருதுநகர்
Image Unavailable

ராஜபாளையம்,-கரும்பு டன் ஒன்றுக்கு விலையை ரூ.3 ஆயிரத்து 500 ஆக உயர்த்த வேண்டும் என்று  தமிழக அரசுக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இ.வி.கே.எஸ். இளங்கோவன் நேற்று ராஜபாளையம் வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். பேட்டியின்போது அவர் மேலும் கூறியதாவது:-
கரும்பு விவசாயிகளின் பிரச்சனையை தீர்க்க தமிழக அரசு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.  விவசாயிகளின் கோரிக்கையான கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.3,500 வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மேலும் விவசாயிகளுக்கு தர வேண்டிய பழைய பாக்கி நிலுவையை உடனடியாக தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாட்டிறைச்சியை உண்பதற்கும், விவசாயிகள் கால்நடைகளை விற்பதற்கு விதித்த தடையை விலக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அவசர செலவுகளுக்கு விவசாயிகள் கால் நடைகள் விற்றுதான் சமாளித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த தடையால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்.  தடையை திரும்ப பெறவில்லை  என்றால் ஒவ்வொரு கிராமத்திலும் போராட்டம் வெடிக்கும்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சியினரிடமும் தலைவர் சோனியா காந்தி பேசி வருகிறார்.  எதிர்கட்சி சார்பில் சோனியா காந்தி தகுதியானவரை வேட்பாளராக  அறிவிப்பார்.
ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறயால் பொதுமக்கள் உணவகங்கள், பேருந்து தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.  .
சீதாராம் யெச்சூரி மீதான தாக்குதல் மிருகத்தனமானது.  கண்டிக்கத்தக்கது.  இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
காங்கிரஸ் தமிழகத்தில் 3வது கட்சியாக இருக்கிறது.  இன்னும் வளர்வதற்கான முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறோம். மகளிர் காங்கிரஸ் என்றாலே தகறாறுதான்.  முழு விபரம் தெரிந்து கொண்டு சொல்கிறேன்.  தவறாக கூறினால் மகளிர் என் மீது பாய்வதற்கும் வாய்ப்பு உண்டு.
தமிழகத்தில் காங்கிரசின் செயல்பாடுகள் தொண்டர்களின் உற்சாகம் குறையாமல் உள்ளது.  சோனியா காந்திக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால், ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக வர வேண்டும்.ஹெச்.ராஜா கூறுவதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. இவ்வாறு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்  கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து