முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.13.73 இலட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வீரராகவராவ் வழங்கினார்.

வெள்ளிக்கிழமை, 9 ஜூன் 2017      மதுரை
Image Unavailable

மதுரை.-மதுரை வடக்கு வட்டம் 50 அடி சாலையில் அம்மா திட்டம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.வி.இராஜன்செல்லப்பா   தலைமையில்   நடைபெற்றது.
இவ்விழாவில் 278 பயனாளிகளுக்கு ரூ.13.73 இலட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  கொ.வீர ராகவ ராவ்,  வழங்கி பேசியதாவது:

 மதுரை மாவட்டத்தில் உள்ள 1394 நியாயவிலை அங்காடி கடைகளில் பொருட்கள் பெரும் 8,52,000 நபர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. விரிவான மருத்துவ காப்பீடுத்திட்டத்தின் கீழ் ரூ.261 கோடி செலவில் 1,51,392 நபர்கள் சிசிக்சைப் பெற்றுள்ளனர். இதுபோன்று அம்மா திட்டம் மூலம் மதுரை மாவட்டத்தில் இதுவரை 1,21,519 நபர்கள் பயனடைந்துள்ளனர்.  சமூகப்பாதுகாப்புத்திட்டத்தின் மூலம் இதுவரை 45,704 ஏழை பெண்களுக்கு ரூ.211.43 கோடி மதிப்பில் தாலிக்கும் தங்கம் மற்றும் திருமண நிதியதவி வழங்கப்பட்டுள்ளது. இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 19,861 பயனாளிகளுக்கு ரூ.40.42 கோடி வங்கி வைப்புத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
 மேலும் மாவட்டத்தில் உள்ள 2,583 பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி திறந்த முதல் நாளான்று விலையில்லா பாடப்புத்தகங்கள், பாடக்குறிப்பேடுகள், வண்ண சீருடைகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 1,10,483 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிகணினிகள் வழங்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி ஹவாஸ் யோஜனா திட்டத்தில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வீடுகட்ட நிதி வழங்கப்படுகிறது. நகரம் மற்றும் ஊரகப் பகுதிகளில் ஏரி, குளங்கள் தூர் வாரப்பட்டு வண்டல் மண் வழங்கப்படுகிறது.                             
  முதியோர் உதவித்தொகையானது 1,27,127 நபர்களுக்கு அவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.  நியாயவிலைக்கடை மூலம் வாங்கப்படும் பொருட்களின் அளவு மற்றும் விலை போன்ற விபரங்கள் குறுஞ்செய்தி வாயிலாக உடனுக்குடன் பொதுமக்களின் அலைப்பேசி எண்ணுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.  மேலும் பொதுமக்களின் சுகாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
. ..
இந்நிகழ்ச்சியில் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.வி.இராஜன்செல்லப்பா அவர்கள் பேசியதாவது:
தென் மாவட்டங்களில் தொழிற்சாலைகள் மற்றும் மருத்துவ மையங்கள் அமைய பெற்றால் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். பெரியார் மற்றும் வைகை அனையிலிருந்து மதுரை மாநகருக்கு 125 எம்.எல்.டி. அளவில் இராட்ச குழாய்கள் மூலம்  குடிநீர் கொண்டு வர ரூ.1,800 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.     
மேலும் பனங்கல் சாலை, முனிச்சாலை, ஓபுளாப்படித்துறை இணைக்கும் வகையில் ரூ.14.64 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம், குருவிக்காரன்சாலை, காமராஜர் சாலை இணைக்க ரூ.15.78 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம், வடக்கு மானகிரி அப்போல்லோ மருத்துவமனை மற்றும் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தை இணைக்கும் வகையில் ரூ.15.55 மதிப்பில் உயர்மட்ட பாலம், வடக்கு ஜவஹர் மருத்துவமனை சந்திப்பு, கே.கே.நகர் - குருவிக்காரன்சாலையில் ரூ.20.37 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் அமைத்திட மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
   இந்நிகழ்ச்சியில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி.நீதிபதி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் கூ.வேலுச்சாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) செந்தில்குமாரி, வடக்கு வட்டாட்சியர் திருநாவுக்கரசு, மாற்றுத்திறனாளி அலுவலர் சகுந்தலா, மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து