முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி; ஜூலை 9ல்மாராத்தான் போட்டி

வெள்ளிக்கிழமை, 9 ஜூன் 2017      விருதுநகர்
Image Unavailable

ராஜபாளையம், ராஜபாளையத்தில் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி குவைத்ராஜா, சுரன் நர்சிங் கல்லூர்p சார்பில் ஜுலை 9ல் மாராத்தன் போட்டி நடைபெறவுள்ளது.
ராஜபாளையத்தில் முதன் முறையாக 20கி.மீ. தூரம் மாராத்தான் ஜுலை 9ல் நடக்க இருக்கிறது. முதல் பரிசு ரூ.1.5லட்சம் 2ம் பரிசு ரூ.1லட்சம் 3ம் பரிசு 75 ஆயிரம் 4 முதல் 10 வரை தலா ரூ.10ஆயிரம் என போட்டியாளர்கள் அறிவித்துள்ளனர்.  பதிவுக் கட்டணம் ரூ.200 இதனால் முன்பதிவுக்கு பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அலுவலகத்தில் முன் பதிவு செய்யவும்.
இதே போல் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு 5கி.மீ மாராத்தான் பதிவு கட்டணம் இல்லை.  பரிசுத் தொகை உண்டு.  முதல் பரிசுத்தொகை ரூ.15ஆயிரம், 2ம் பரிசு ரூ.10ஆயிரம், 3ம் பரிசு ரூ.7,500, 4 முதல் 10 வரை தலா ரூ.3ஆயிரம் எனவும் போட்டியளர்கள் அறிவித்துள்ளனர்.
ராஜபாளையம் குவைத்ராஜா மாராத்தான், சுரன் காலேஜ் ஆப் நர்சிங் இணைந்து நடத்தும் மாபெரும் மாராத்தான் விழிப்புணர்வு கூட்டம் நேற்று முன்தினம் ஆனந்தாஸ் ஹாலில் நடைபெற்றது.
குவைத்ராஜா, ராஜபாளையம் டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் தலைமை வகித்தனர்.  மாராத்ததான ஒருங்கிணைப்பாளர் துரைசிங்கம் போட்டி பற்றிய விழிப்புணர்வு விளக்கம் அளித்துப் பேசினார்.
மராத்தான் விளக்கும் குறித்து தொழிலாதிபர் குவைத்ராஜா கூறியதாவது,
குழந்தைகள், மாணவ, மாணவிகள் மற்றும் பெரியவர்களின் உடல் நலம் ஆரோக்கியத்திற்காகவும் இந்த மாராத்தான் நடத்தப்படுகிறது.  இந்தியாவில் முதன் முதலில் புனே நகரில் தான் ஆரம்பிக்கப்பட்டது.  மாராத்தானில் புனே முதல் இடமும், தமிழ்நாடு 2வது  இடத்திலும் உள்ளது.  ராஜபாளையத்தில் முதன் முதலாக நடக்கும் மாராத்தான் போட்டியில் 5ஆயிரம் முதல் 7ஆயிரம் பேர் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம் என்று கூறினார்.
துரைசிங்கம் கூறியதாவது, ராஜபாளையம் புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவில் முன்புள்ள மைதானத்தில் இருந்து மாராத்தான் புறப்படுகிறது.  தென்காசிரோடு, பிஏ.சி.ஆர். மணிக்கூண்டு ரவுண்டானா, முடங்கியார்ரோடு, அய்யனார்கோவில்ரோடு, நாடார்மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலிருந்து வந்த வழியே திரும்பி, தாலுகா அலுவலகம், மாடசாமிகோவில்ரோடு, புகழேந்திரோடு, பஞ்சுமார்க்கெட், நேருசிலை, டி.பி.மில்ஸ் ரோடு, ரயில்வேகேட் பி.ஏ.சி.ஆர்ரோடு வழியாக மீண்டும் மாரியம்மன் கோவில் மைதனத்தில் நிறைவடைகிறது.  மாராத்தான் செல்லும் வழிகளில் பாதுளகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும்.  வாகனங்களில் கண்காணிப்பு பணியில் போலீசார் உட்பட உடற்கல்வி இயக்குனர்கள் பலர் ஈடுபடுத்தப்படுவார்கள் என ஒருங்கிணைப்பாளர் துரைசிங்கம் தெரிவித்தார்.
கூட்டத்தில் சுரன் கல்லூரி நிர்வாகி கே.பி.சுப்பிரமணியராஜா, கல்லூரி முதல்வர்; ராஜா, வடக்கு, தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து