முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடைக்கானல் அருகே பெற்ற மகளை கர்ப்பிணியாக்கிய கொடூர தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனை திண்டுக்கல் கோர்ட் அதிரடி தீர்ப்பு

வெள்ளிக்கிழமை, 9 ஜூன் 2017      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், -கொடைக்கானல் அருகே பெற்ற மகளை கர்ப்பிணியாக்கிய கொடூர தந்தைக்கு சாகும் வரை சிறைதண்டனை விதித்து திண்டுக்கல் கோர்ட் அதிரடி தீர்ப்பளித்தது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை கிராமமான அடுக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னச்சாமி(45). விவசாயி. இவர் குடும்ப பிரச்சனை காரணமாக தனது மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். அவருடன் 16 வயது மகள் வசித்து வந்தார். சின்னச்சாமி தனது இச்சைக்கு மகளை பயன்படுத்திக் கொண்டார். தனியாக இருந்த மகளை வலுக்கட்டாயமாக கற்பழித்தார். இதில் அவர் கர்ப்பிணியானார். பள்ளிக்கு சென்ற அவரது மகள் நடவடிக்கையில் மாற்றம் தென்படவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இதுகுறித்து கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் அவரது வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தியதில் மகளையே சின்னச்சாமி உல்லாசம் அனுபவித்தது தெரியவந்தது. இதனையடுத்து சின்னச்சாமியைக் கைது செய்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் மாவட்ட மகிளா ஞிதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த ஞிதிபதி கருணாநிதி மகளையே கர்ப்பிணியாக்கிய தந்தை சின்னச்சாமிக்கு ஆயுள்தண்டனையும், சாகும் வரை சிறைதண்டனையும், ரூ.2 ஆயீரம் அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து