அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழா

வெள்ளிக்கிழமை, 9 ஜூன் 2017      ஈரோடு
erode photo no 1 admk 1

ஈரோடு, பெரியார் வீதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழா  நடைபெற்றது.

தொடங்கி வைத்தார்

விழாவுக்கு, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஏ.முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் முத்துராமசாமி முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக செயலருமான கே.வி.இராமலிங்கம்,  மாணவர் சேர்க்கையைத் தொடக்கி வைத்துப் பேசினார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடை, புத்தகம், நோட்டு புத்தகம் ஆகியவற்றை வழங்கினார். விழாவில், மாநகராட்சி முன்னாள் மண்டலத் தலைவர் மனோகரன், மாவட்ட உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஜெயக்குமார், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் கலைசெல்வி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து