வெறிநாய்கடி நோய் இல்லாத சுகாதார மாவட்டமாக நீலகிரி மாவட்டத்தை அறிவிப்பதற்கான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் பொ.சங்கர் தொடங்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 9 ஜூன் 2017      நீலகிரி
Rabis Free Nilgiri

உதகை தமிழகம் விருந்தினர் மாளிகை கூட்ட அரங்கில் இன்று வெறிநாய்கடி நோய் இல்லாத சுகாதார மாவட்டமாக நீலகிரி மாவட்டத்தை அறிவிப்பதற்கான ஆய்வுக் கூட்டத்தினை மாவட்ட கலெக்டர்  தொடங்கி வைத்தார். 

ரேபிஸ் தடுப்பூசி

“நம்முடைய நீலகிரி மாவட்டம் பெருமைக்குரிய மாவட்டம். அதாவது ரேபிஸ் தடுப்பூசியை தயாரித்து இந்தியாவிலேயெ இரண்டாவது மையத்தை கொண்ட மாவட்டம் என்றாலும் இன்னும் ரேபிஸ் தடுப்பூசிகள் தொடர்ந்து உற்பத்தி செய்யும் மையம் இருப்பது நமது மாவட்டம். ஒரு மாவட்டத்தை ரேபிஸ் நோய் இல்லா மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றால் மாவட்ட அளவிலே மாவட்ட கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். இதை தொடர்ந்து மாவட்ட கண்காணிப்பு குழு 2013-ல் அமைத்து 4 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலமாக விவரங்களை பெற்றதில் 2006க்கு பிறகு நமது மாவட்டத்தில் ரேபிஸ் நோய் இல்லை. அதேபோல கால்நடை துறை மூலமாக பெறப்பட்ட விவரங்களை ஆய்வு செய்தபொழுது நமது மாவட்டத்தில் ரேபிஸ் நோய் இல்லை என்பது தெளிவாகிறது. எல்லா அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் யுசுஏ – தடுப்பூசி உள்ளது.

நாய்களுக்கு தடுப்பூசி போட்டப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்

அதன்பிறகு மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ரேபிஸ் நோய் தாக்குதல் உள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும். விலங்குகள் வன விலங்குகள் இறந்தால் அது ரேபிஸ் நோயால் இறக்கவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.
 நமது மாவட்டத்திற்குள் நுழையும் அனைத்து நாய்களும் தடுப்பூசி போடப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். அதற்கு காவல்துறைஇ வனத்துறை, வருவாய்த்துறை அலுவலர்களுக்கு சோதனைச் சாவடிகளில் விழிப்போடு இருக்க பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நமது மாநிலமே இந்தியாவில் வெறிநாய் கடி நோய்க்கு எதிரான பன்முக தடுப்பு நடவடிக்கைகள் எடுத்த முதல் மாநிலமாகும். கடந்த 2003-2004ம் ஆண்டிற்கு பிறகு வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பாஸ்டியர் மையம் குன்னூரில் பதிவாகவில்லை. மேலும் கடந்த 2006ம் ஆண்டு முதல் வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் உதகை அரசு தலைமை மருத்துவமனையிலும் பதிவாகவில்லை.
மேற்கண்ட காரணிகளை கொண்டு இயக்குநர் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை  ஆகஸ்ட் 31 – 2013ம் ஆண்டு குன்னூர் பாஸ்டியர் மையத்தில் தேசிய அளவிலான பயலரங்கு நடத்தி அதில் நீலகிரி மாவட்டத்தை வெறிநாய் கடி இல்லாத மாவட்டமாக அறிவிப்பதற்குரிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நடடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

விரைவில் ரேபிஸ் நோய் இல்லா மாவட்டமாக

கூடிய விரைவில் ரேபிஸ் நோய் இல்லா மாவட்டமாக நீலகிரி மாவட்டம் அறிவிக்கப்படவுள்ளது. அப்படி அறிவித்தாலும் யுசுஏ – தடுப்பூசி எல்லா அரசு மருத்துவமனைகளில் வைக்கப்படும். எனவே பொதுமக்கள் பயப்பட தேவையில்லை.” எனப் பேசினார்.
 இக்கூட்டத்தில் பாஸ்டியர் மைய இயக்குநர் மரு.சேகர், கூடுதல் இயக்குநர் மரு. வடிவேலன், இணை இயக்குநர் (கொள்ளை நோய்) மரு.பிரேம்குமார், இணை இயக்குநர் (ஏடீனுஊ) மரு.சரவணன், துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) மரு.பொற்கொடி, உதகை நகர்நல அலுவலர் (ம) ஆணையாளர் (பொ) மரு.பிரபாகரன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து