முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருங்கல்பாளையம் மாடுகள்சந்தை

வெள்ளிக்கிழமை, 9 ஜூன் 2017      ஈரோடு

மாட்டு இறைச்சிக்குத் தடை விதிக்கும் மத்திய அரசின் உத்தரவு மற்றும் திடீர் மழை காரணமாக கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தைக்கு வரும் மாடுகள் எண்ணிக்கை குறைந்தது. ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை வாரம்தோறும் புதன், வியாழக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது. அதன்படி, புதன்கிழமை நடைபெற்ற சந்தைக்கு 100 வளர்ப்புக் கன்றுக் குட்டிகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர். இவைரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 8 ஆயிரம் வரை விற்பனையாயின. இதை பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். வியாழக்கிழமை வழக்கமான சந்தை கூடியது. இதற்கு சேலம், கோவை, கரூர், நாமக்கல், திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் அதிக மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

பசு மாடுகள் 300, எருமை 250 என மொத்தம் 550 மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. இதில், எருமை ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ. 18 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ. 36 ஆயிரத்துக்கும் விற்பனையானது. பசுமாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ. 16 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ. 32 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

பசுந்தீவனம்

சென்னை, திருவண்ணாமலை, ஆத்தூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், மகாராஷ்டிரம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், கோவா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் வந்திருந்த வியாபாரிகள், விவசாயிகளிடம் நேரடியாக விலைபேசி மாடுகளைப் பிடித்து வேன், லாரிகளில் ஏற்றிச் சென்றனர். இதுகுறித்து சந்தை மேலாளர் முருகன் கூறுகையில், ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளதால் மாடுகளுக்குத் தேவையான பசுந்தீவனம் ஓரளவுக்கு கிடைத்து வருகிறது. இதனால், குறைந்த அளவிலான விவசாயிகளே மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். கேரளத்தில் இருந்து வரும் வியாபாரிகள் பெரும்பாலானோர் மாடுகளை இறைச்சிக்காக வாங்கிச் செல்வார்கள். ஆனால், தற்போது இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளதால் கேரள வியாபாரிகளின் வருகை குறைந்துள்ளது என்றார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து