முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹவாய் பீட்சாவைக் கண்டுபிடித்த சாம் மரணம்

சனிக்கிழமை, 10 ஜூன் 2017      உலகம்
Image Unavailable

ஹவாய் :  ஹவாய் பீட்சாவைக் கண்டுபிடித்தவதரான சாம் பானோபோலோஸ் தனது 83வது வயதில் மரணமடைந்தார்.

உலக அளவில் புகழ் பெற்ற பீட்சா வகைகளில் இந்த ஹவாய் பீட்சாவும் ஒன்று. இந்த பீட்சாவுக்கு நாக்கு சப்புக் கொட்டி சாப்பிட பெரும் கூட்டமே உலக அளவில் உள்ளது. ஹவாய் பீட்சா என்றாலும் கூட சாமுக்கு சொந்த நாடு கனடாதான். ஓன்டோரியாவைச் சேர்ந்தவர். கடந்த 1954ம் ஆண்டு கனடாவை விட்டு கிரீஸுக்கு இடம் பெயர்ந்தார் சாம். அப்போது அவருக்கு வயது 20. தனது இரு சகோதரர்களுடன் இணைந்து ஹோட்டல் தொழிலில் ஈடுபட்டார் சாம்.

1962ம் ஆண்டுதான் சாம் தனது ஒரு உணவகத்தில் இந்த பீட்சாவை அறிமுகப்படுத்தினார். பைனாப்பிள் கலந்து உருவாக்கப்பட்ட அந்த பீட்சாதான் ஹவாய் பீட்சாவாக பிரபலமானது. இந்த பீட்சாவுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் பெரிய ரசிகர்கள் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து