முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா இணைந்தது: தீவிரவாதத்தை ஒழிக்க உறுப்பு நாடுகளுக்கு மோடி அழைப்பு

சனிக்கிழமை, 10 ஜூன் 2017      உலகம்
Image Unavailable

ஷாங்காய், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப் பில் (எஸ்சிஓ) இந்தியா, பாகிஸ்தான் உறுப்பு நாடுகளாக இணைந்தன. இதைத்தொடர்ந்து நடந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ‘‘மனித குலத்தை அச்சுறுத்தும் தீவிரவாத்தை ஒழிக்க உறுப்பு நாடுகள் ஒருங்கிணைய வேண்டும்’’ என அழைப்பு விடுத்தார்.

ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகள் அடங்கிய பொருளாதார, அரசியல், ராணுவ ஒத்துழைப்பு அமைப்பான எஸ்.சி.ஒ எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கடந்த 1996-ல் உருவாக்கப்பட்டது. சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான் உஸ்பெகிஸ் தான் ஆகிய நாடுகள் இந்த அமைப்பில் உள்ளன.

இந்த அமைப்பின் உச்சி மாநாடு கஜகஸ்தானில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த கூட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் எஸ்சிஓ அமைப் பில் முறைப்படி இணைந்தன. இதைத் தொடர்ந்து கஜகஸ்தான் அதிபர் நூர்சுல்தான் நசர் பயேவாவை மோடி சந்தித்து, இரு தரப்பு உறவுகள் குறித்து விவாதித்தார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பு

இந்நிலையில் நேற்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார். அப்போது எஸ்.சி.ஒ அமைப்பில் இந்தியாவை உறுப்பினராக சேர்ப் பதற்கு ஆதரவு அளித்த சீனாவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் இரு நாடுகளும் பல்வேறு விவ காரங்களில் ஒத்துழைப்பு நல்கு வது, தொடர்புகளை வலுப்படுத் துவது, சர்வதேச விவகாரங்களில் ஒருங்கிணைந்து செயல்படுவது, பரஸ்பரம் தங்கள் நாட்டின் பிரச்சினைகள், கவலைகளுக்கு மதிப்பு அளிப்பது, சர்ச்சைகளை கவனமாக கையாள்வது ஆகியவை குறித்து இருவரும் விவாதித்தனர். இந்தியா சீனா உறவில் விரிசல் ஏற்பட்டிருந்த சூழலில், பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை நேற்று சந்தித்து பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பிரதமர் பேச்சு

உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது,

மனித சமுதாயத்துக்கு தீவிர வாதம் தான் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாத்தை ஒழிக்க அனைத்து நாடுகளும் கூட்டாக இணைய வேண்டும். ஆசிய பிராந்தியத்தில் வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்க விரிவான போக்குவரத்து இணைப்பு அவசியம். எஸ்.சி.ஒ நாடுகளுக்கு இடையே இந்தியாவுக்கு ஒத் துழைப்பு இருக்கிறது.

அதை மேலும் வலுப்படுத்தும் விதமாக போக்குவரத்து இணைப்பில் கவனம் செலுத்த விரும்புகிறோம். அதே சமயம் பிறநாடுகளின் இறையாண்மை மற்றும் பிரதேச ஒருமைப்பாட்டில் தலையிடாத வகையில் இந்த இணைப்பு இருத்தல் வேண்டும். போரினால் பாதிப்படைந்துள்ள ஆப்கானிஸ் தானில் அமைதியை ஏற்படுத்தவும் எஸ்.சி.ஒ நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பருவ நிலை மாற்ற விவகாரத்திலும் எஸ்.சி.ஒ. நாடுகள் தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து