கோயம்புத்தூர் நகராட்சியில் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.9.16 கோடி மதிப்பிலான இடங்கள் மீடட்பு

சனிக்கிழமை, 10 ஜூன் 2017      கோவை

கோயம்புத்தூர் மாநகராட்சியில் 4 மண்டலங்களிலுள்ள  மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்களை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.9.16 கோடி மதிப்பிலான 1.27 ஏக்கர் அளவிலான மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன்  தகவல் தெரிவித்தார்.

மீட்பு நடவடிக்கை

மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்கள் தெரிவிக்கையில், “கோயம்புத்தூர் மாநகராட்சியிலுள்ள பகுதிகளில் மாநகராட்சி பொது ஒதுக்கீட்டு இடங்களை உதவி நகரமைப்பு அலுவலர்கள் மூலம் இடங்களை கண்டறிந்து, விரைவில் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுவரை மாநகராட்சியிலுள்ள 5 மண்டலங்களிலிருந்து கடந்த 2016 நவம்பர் மாதம் மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்களை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.64.70 கோடி மதிப்பிலான 5.34 ஏக்கர் அளவிலான இடங்களும, டிசம்பர் மாதம் சுமார் ரூ.55.45 கோடி மதிப்பிலான 3.77 ஏக்கர் அளவிலான இடங்களும் மற்றும் 2017 ஜனவரி மாதம் சுமார் ரூ.26.2 கோடி மதிப்பிலான 2.72 ஏக்கர் அளவிலான இடங்களும், பிப்ரவரி மாதம் சுமார் ரூ.71.95 கோடி மதிப்பிலான 7.66 ஏக்கர் அளவிலான மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களும், மார்ச் மாதம் சுமார் ரூ.50.38 கோடி மதிப்பிலான 6 ஏக்கர் அளவிலான மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களும் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டும், மீட்கப்பட்ட இடங்களில் பூங்கா அமைத்தல், தோட்டங்கள் அமைத்தல், மரம் செடிகள் நடுதல் போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதனை தொடர்ந்து இன்று 10.06.2017 மாநகராட்சியிலுள்ள 4 மண்டலங்களான மேற்கு மண்டலம், கிழக்கு, வடக்கு மற்றும் தெற்கு மண்டலம் ஆகிய பகுதிகளில் மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்களை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.9.16 கோடி மதிப்பிலான 1.27 ஏக்கர் அளவிலான மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாநகராட்சியின் மேற்கு மண்டலம், வடவள்ளி, வார்டு-16, மருதம் நகர், பூங்கா இடம் பகுதியில் பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.1.50 கோடி மதிப்பிலான 15.02 சென்ட் அளவிலான இடங்களும், வடவள்ளி, வார்டு-16, மாசாணியம்மன் வீதி, குழந்தைகள் விளையாட்டுப் பூங்கா  பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.1.64 கோடி மதிப்பிலான 16.36 சென்ட் அளவிலான இடங்களும், கிழக்கு மண்டலம், காளப்பட்டி, வார்டு-34, வி.வி.சி நகரில் பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.1.44 கோடி மதிப்பிலான 18 சென்ட் அளவிலான இடங்களும், காளப்பட்டி, வார்டு-34, இளங்கோ நகர் ஹவுசிங் யூனிட் சாலையோர பகுதியில் பொது ஒதுக்கீடு இடத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட கடைகளும், வடக்கு மண்டலம், வெள்ளக்கிணறு, வார்டு-43, பொன்விழா நகரில் பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.3.15 கோடி மதிப்பிலான 63 சென்ட் அளவிலான இடங்களும் மற்றும் தெற்கு மண்டலம், குறிச்சி, வார்டு-95, உதயம் நகர் பூங்கா பகுதியில் பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.1.43 கோடி மதிப்பிலான 14.3 சென்ட் அளவிலான இடங்களும், ஆகமொத்தம், மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்களை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.9.16 கோடி மதிப்பிலான 1.27 ஏக்கர் அளவிலான மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்ட்டுள்ளது.

மேலும், இதுபோன்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.” இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன்  அவர்கள் தெரிவித்தார்.

How to Make Coconut Oil at Home? | வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து