முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாமக்கல் மாவட்டத்தில்110 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6.65 லட்சம் மதிப்பிலான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்: அமைச்சர்கள் பி.தங்கமணி, வி.சரோஜா வழங்கினர்

சனிக்கிழமை, 10 ஜூன் 2017      நாமக்கல்
Image Unavailable

 

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மோட்டார் பொருத்தப்பட்ட இலவச தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (10.06.2017) நடைபெற்றது. இவ்விழாவிற்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமை வகித்தார். இவ்விழாவில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சி.சந்திரசேகரன், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் பி.தங்கமணி அவர்கள் மற்றும் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மோட்டார் பொருத்தப்பட்ட இலவச தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

தையல் எந்திரங்கள்

இவ்விழாவில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.58,000 வீதம் ரூ.1,16,000 மதிப்பிலான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், 102 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.4325 வீதம் ரூ.4,41,150 மதிப்பிலான மோட்டார் பொருத்திய இலவச தையல் இயந்திரங்களையும், மனவளர்ச்சி குன்றியோருக்கான பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 6 மனவளர்ச்சி குன்றியோருக்கு மாதம் தலா ரூ.1500 வீதம் ஆண்டிற்கு ரூ.1,08,000 மதிப்பிலான மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவு ஆணைகளையும் என மொத்தம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 110 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மோட்டார் பொருத்தப்பட்ட இலவச தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் பி.தங்கமணி அவர்கள் மற்றும் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா ஆகியோர் வழங்கினார்கள்.

இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.பழனிசாமி, சேலம் நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த ஆவின் தலைவர் ஆர்.சின்னுசாமி, அரசு வழக்கறிஞர் தனசேகர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் க.சுப்ரமணி, உள்ளிட்ட முன்னால் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள். அரசுத்துறை அலுவலர்கள், பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து