முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்து சமய அறநிலையத்துறையின் செயல் அலுவலர் எழுத்துத்தேர்வு மையத்தில் கலெக்டர் வா.சம்பத், நேரில் ஆய்வு

சனிக்கிழமை, 10 ஜூன் 2017      சேலம்
Image Unavailable

 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இந்து சமய அறநிலையத்துறையின் செயல் அலுவலர் எழுத்தேர்வு மையத்தினை நேற்று(10.06.2017) கலெக்டர் வா.சம்பத், நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

எழுத்துத்தேர்வு

 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் சேலம் மாவட்டத்தில் இன்று 10.06.2017 மற்றும் 11.06.2017 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் இந்து சமய அறநிலையத்துறையின் செயல் அலுவலர் நிலை-3 மற்றும் நிலை-4 ஆகிய தேர்வுகள் சேலம் வட்டத்தில் உள்ள 9 கல்லூரிகளில் நடைபெறுகிறது. நேற்று10.06.2017 நடைபெறும் அலுவலர் நிலை -3 தேர்வினை 3,432 தேர்வாளர்களும், இன்று 11.06.2017 நடைபெறும் அலுவலர் நிலை – 4 தேர்வினை 4,784 தேர்வாளர்களும் என இரண்டு நாட்களும் நடைபெறும் தேர்வினை மொத்தம் 8,216 தேர்வாளர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.

இன்று நடைபெற்ற நிலை -3 தேர்வினை கலெக்டர் அவர்கள் சேலம் அரசு கலைக்கல்லூரியில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சேலம் மாவட்டத்தில் 9 கல்லூரிகளில் நடைபெற்ற இன்றைய தேர்வினை 1,796 தேர்வாளர்கள் வருகைபுரிந்து தேர்வு எழுதுகின்றனர்.

இந்த தேர்வினை கண்காணிக்க தலைமை கண்காணிப்பு அலுவலர் மற்றும் துணை கலெக்டர்கள் நிலையில் 28 முதன்மை கண்காணிப்பு அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இத்தேர்வு நேர்மையாக நடத்தப்படுவதை உறுதிசெய்யும் வகையில் தேர்வு மையங்களில் வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்படுகிறது.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சி.விஜய்பாபு, சேலம் வட்டாட்சியர் லெனின் மாவட்ட தலைமை உதவியாளர்கள் பத்மா, கலைச்செல்வி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து