முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதத்துக்கு நிதி அளிப்பதை கத்தார் நிறுத்த வேண்டும்: அமெரிக்கா எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 11 ஜூன் 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : தீவிரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பதை கத்தார் நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தீவிரவாதிகளுக்கு கத்தார் ஆதரவு அளிப்பதாக குற்றம் சாட்டி அந்த நாட்டுடன் சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 4 நாடுகள் தூதரக உறவை துண்டித்துள்ளன.

கத்தாரில் எண்ணெய் வளம் நிறைந்திருந்தாலும் உணவுப் பொருட்களுக்கு முற்றிலும் சவுதி அரேபியாவை மட்டுமே சார்ந்துள் ளது. சரக்கு போக்குவரத்தை சவுதி அரேபியா நிறுத்தியிருப்பதால் கத்தாரில் தற்போது உணவு பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன்  வேண்டுகோள்

கத்தாரின் அல்-உதெய்ட் நகரில் அமெரிக்க விமானப்படைத் தளம் உள்ளது. இது, ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான வான்வழி தாக்குதலின் கட்டுப்பாட்டு மையமாக விளங்குகிறது. எனவே கத்தார் விவகாரத்தில் பொறுமை காக்கும்படி அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் வளைகுடா நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதிபர்  டிரம்ப் பேச்சு

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வாஷிங்டனில் நேற்று கூறியதாவது:

தீவிரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பதை கத்தார் உடனடியாக நிறுத்த வேண்டும். வெறுப்புணர்வை விதைப்பதை கைவிட வேண்டும். அப்பாவிகளை கொல்வதை நிறுத்த வேண்டும். கத்தாருடன் அண்டை நாடுகள் தூதரக உறவை துண்டித்திருப்பது கடின மான முடிவு. ஆனால் அதைதவிர வேறு வழியில்லை. அண்மையில் நடந்த 50 அரபு நாடுகளின் மாநாட்டில் தீவிரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பதை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து