பெரம்பலூர் மாவட்டத்தில் குரூப் VIIB செயல் அலுவலருக்கான தேர்வுகள் : மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கரன் நேரில் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 11 ஜூன் 2017      பெரம்பலூர்
Perambalur 2017 06 11

தமிழ்நாடு தேர்வாணையத்தால்; குரூப் VIIB-யில் அடங்கிய செயல் அலுவலர் (கிரேடு III), குரூப் ஏIII-ல் அடங்கிய செயல் அலுவலர் (கிரேடு IV)க்கான அலுவலருக்கான தேர்வுகள் (10.06.2017) மற்றும் (11.06.2017) ஆகிய இரு தினங்களில் பெரம்பலூர்; தனலெட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகின்றன. அதன்படி இன்று (10.06.17) நடைபெற்ற குரூப் VIIB செயல் அலுவலருக்கான (கிரேடு III) தேர்வுகளை மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பேட்டி

அதனை தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்ததாவது:நேற்று (10.06.17) நடைபெற்று வரும் குரூப் VIIB-யில் அடங்கிய செயல் அலுவலர் (கிரேடு III), தேர்வெழுத 645 நபர்கள் விண்ணப்பித்திருந்தனர். தேர்வெழுத விண்ணப்பித்தவர்களில் 311 நபர்கள் தேர்வெழுதினர். மேலும் 334 நபர்கள் தேர்வெழுதவில்லை. மேலும் இன்று நடைபெற உள்ள குரூப் ஏIII-ல் அடங்கிய செயல் அலுவலருக்கான் (கிரேடு IV) தேர்வுகளை பெரம்பலூர்; மாவட்டத்தில் 880 நபர்கள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு எழுத உள்ள தேர்வர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தேர்வு மையத்திற்கு தேர்வர்கள் எளிதில் சென்று வர தேவையான பேருந்து வசதிகளும், தேர்வு மையத்தில் தேர்வு எழுதும் நபர்களின் வசதிக்காக ஒரு மருத்துவக் குழுவும், தீயணைப்பு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் சிறப்பான முறையில் தேர்வுகள் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக தேர்வு மையம் முழுவதும் வீடியோ கிராபர் மூலமாக தேர்வுகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றது. தேர்வு மையங்களை கண்காணிப்பதற்காக மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பாண்டியன் அவர்களை பறக்கும் படை அலுவலராக நியமனம் செய்யப்பட்டு, தேர்வுகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், தமிழ்நாடு தேர்வாணைய பிரிவு அலுவலர் எஸ்.ராஜா, வருவாய் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், சமூக பாதுகாப்புத்திட்ட வட்டாட்சியர் சிவக்குமார், வட்டாட்சியர்(பேரிடர் மீட்பு மேலாண்மை) மகாராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து