முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூர் மாவட்டத்தில் 6 இடங்களில் மக்களவை துணை சபாநாயகர் கோரிக்கை மனுக்கள் பெற்றார் : உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 11 ஜூன் 2017      கரூர்
Image Unavailable

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புலியூர், உப்பிடமங்கலம், தரகம்பட்டி, பழையஜெயங்கொண்ட சோழபுரம், கிருஷ்ணராயபுரம் மற்றும் தாந்தோன்றி ஆகிய இடங்களில் மக்களவை துணை சபாநாயகர் டாக்டர் மு.தம்பிதுரை , மாவட்ட கலெக்டர் (பொ) .சூர்யபிரகாஷ் முன்னிலையில் நேற்று(10.6.2017) பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி உடன் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டதுடன், சமூக நலத்துறையின் சார்பாக 5 பயனாளிகளுக்கு மூவானூர் இராமாமிர்த அம்மையார் திருமண நிதியுதவித் திட்டத்தின்கீழ் ரூ.2.25 லட்சம் மதிப்பிலான திருமண நிதியுதவிகளை வழங்கினார்.

குறைதீர் கூட்டம்

இந்நிகழ்ச்சியில், மக்களவை துணைசபாநாயகர் தெரிவித்ததாவது:முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களின் உத்தரவுப்படி, மக்களைத் தேடி அரசு நிர்வாகம் சென்று தேவையான உதவிகளைச் செய்ய வாரந்தோறும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் கிராமங்தோறும் அம்மா திட்ட முகாம், மாதந்தோறும் மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு முகாம், அம்மா கால்செண்டர், இணையதளத்தில் கோரிக்கைகளை விண்ணப்பிக்கும் முறை போன்றவைகளின் வாயிலாக பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரூர் நகர்ப்புற பகுதிகளில் 50 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்கள் தங்கள் வசிப்பிடத்திற்கு பட்டா கேட்டு விண்ணப்பித்ததையொட்டி 634 பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களின் கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்காக கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

மாவட்டத்தில் உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் நிதிகள் அதிகளவில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. மழை குறைவின்காரணமாக ஏற்பட்ட கடுமையான வறட்சியை போக்குவதற்காகவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சுமார் ரூ.16 கோடி மதிப்பிலான வறட்சி நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. கடவூர் பகுதியில் மட்டும் ரூ.74 இலட்சம் மதிப்பில் வறட்சி நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உப்பிடமங்கலம் சந்தையை ரூ.50 இலட்சம் மதிப்பில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. வரும் காலங்களில் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளில் கோரிக்கை மனுக்களை பெற்று அதன்மீது நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது நாடாளுமன்ற துணை சபாநாயகர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் கீதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, வருவாய் கோட்டாட்சியர்கள் பாலசுப்ரமணியம், சக்திவேல், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில், பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் விஜயசங்கர், சுப்ரமணி, பாஸ்கர், வட்டாட்சியர்கள் சக்திவேல் (கரூர்), முருகன் (கடவூர்), பாலசந்தர் (கிருஷ்ணராயபுரம்), கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் கடவூர் செல்வராஜ், காளியப்பன், பொரணி கணேசன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து