முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதத்துக்கு கத்தார் உதவுகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை: அதிபர் எர்டோகன்

ஞாயிற்றுக்கிழமை, 11 ஜூன் 2017      உலகம்
Image Unavailable

கத்தார் : தீவிரவாதத்துக்கு கத்தார் உதவுகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எர்டோகன் கூறும்போது, "தீவிரவாதத்துக்கு கத்தார் உதவுவதாக இதுவரை நான் அறிந்ததில்லை. சவுதி மற்றும் அதன் கூட்டு நாடுகள் கத்தார் மீது சுமத்தியுள்ள குற்றச்சா ட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை" என்றார்

வளைகுடா நாடான கத்தார் இஸ்லாமியக் குழுக்களுக்கு ஆதரவளித்து தீவிரவாதத்தை வளர்ப்பதாகக் கூறி தங்கள் ராஜாங்க உறவுகளைத் துண்டித்துக் கொள்வதாக சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 4 அரபு நாடுகளும் அறிவித்துள்ளது.

ஆனால் சவுதி மாற்று அரபு நாடுகளின் இந்த முடிவை துருக்கி அதிபர் ஆரம்பம் முதலே விமர்சித்து வந்துடன் கத்தரவுடனான துருக்கியின் உறவு தொடரும் என்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து