திருச்சி தஞ்சாவூர், திருவாரூர் , நாகைமாவட்ட கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர்களுடன் செயலாக்கம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் : அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் நடந்தது

ஞாயிற்றுக்கிழமை, 11 ஜூன் 2017      திருச்சி
Trichy 2017 06 11

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திருச்சி தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டிணம் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர்களுடனான வளர்ச்சித்திட்டம் மற்றம் செயலாக்கம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் நடைபெற்றது. ஆய்வுக்கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் , மாவட்ட கலெக்டர் கு.இராசமணி, , திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினர் ப.குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

விவசாயிகள் நலன்

ஆய்வுக்கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பேசியதாவது: புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதல்களின்படி செயல்படும் தமிழ்நாடு அரசு, மாநிலத்தில் உள்ள விவசாயிகளின் நலன் மற்றும் மேம்பாட்டை கருத்தில் கொண்டும், தமிழகத்தில் விவசாய உற்பத்தயை இருமடங்கு, விவசாயிகளின் வருவாயை மூன்று மடங்கு என பெருக்கிடவும், விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் குறிக்கோளுடன் கடந்த 6 ஆண்டுகளில் அதாவது 2011-2012 முதல் 31.03.2017 வரையிலான காலத்தில் மாநிலத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக 58 இலட்சத்து 57 ஆயிரத்து 408 விவசாயிகளுக்கு ரூ.27,442.22 கோடி அளவிற்கு பயிர்கடன்கள் வழங்கப்பட்டள்ளது.

அதே போல், 2016-2017 முதல் 2020-2021 வரையிலான 5 ஆண்டுகளுக்கு பயிர்கடன் ரூபாய் 40 ஆயிரம் கோடி அளவில் வழங்க குறியீடுகள் நிர்ணயம் செய்யப்பட்டு, பயிர்கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2016-2017 ஆம் ஆண்டில், வறட்சி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள் போன்ற காரணங்களால் தமிழகம் பாதிக்கப்பட்ட நிலையிலும் 4227.98 கோடி அளவிற்கு பயிர்கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் சீரிய முயற்சியின் காரணமாக விளைந்த ஒரு மைல் கல் நடவடிக்கையாகும். நடப்பு ஆண்டில் (2017-2018) பயிர்கடன் வழங்க ரூபாய் 7 ஆயிரம் கோடி குறியீடு நிர்ணயிக்கப்பட்டு 31.05.32017 வரை 59 ஆயிரத்து 208 விவசாயிகளுக்கு ரூ.381.23 கோடி அளவிற்கு பயிர்கடன்கள் வழங்கப்பட உள்ளது.

திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டிணம் ஆகிய நான்கு டெல்டா மாவட்டங்களில் மட்டும் 31.05.2017 வரை ரூ.11.06 கோடி அளவிற்கு பயிர்கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. மேற்கூறிய மாவட்டங்களில் பயிர்கடன் வழங்குவது குறித்து ஆய்வு செய்த அமைச்சர் , விவசாயிகளுக்கு தேவையின் அடிப்படையிலும், சட்ட விதகள் மற்றும் தகுதிகளுக்குட்பட்டு, தாராளமாக பயிர்கடன் வழங்க வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பயிர்கடன் வழங்க தேவைப்படும் கூடுதல் தொகை ஒதுக்கப்படும்.

திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டிணம் ஆகிய நான்கு டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்க உர இருப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டபோது, தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய திருச்சிராப்பள்ளி மண்டல அளவில் 3361 மெட்ரிக்டன் மற்றும் தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணைய அளவில் 9946 மெட்ரிக்டன் என மொத்தம் 13 ஆயிரத்து 307 மெட்ரிக்டன் அளவிற்கு யூரியா, பொட்டாஷ், கூட்டு உரம், பாமினி, 17:17:17 கலப்பு உரம் ஆகியவை இருப்பு உள்ளதையும் நான்கு மாவட்டங்களில் உள்ள 647 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 13 ஆயிரத்து 469 மெட்ரிக்டன் உர இருப்பு உள்ளது குறித்தும் ஆய்வு செய்த பின்னர், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் போதிய உரங்கள் இருப்பு இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

பயிர்கடன்

திருவாரூர் மாவட்டத்திலுள்ள பாமினி உர ஆலை தானியங்கி பொட்டலமிடும் இயந்திரம் பொருத்தப்பட்டு, நவீனமயமாக்கப்பட்டு முழுமையாக பயன்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பயிர்கடன் தொகையிலிருந்து விவசாயிகள் சாகுபடி செலவினத்தை பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் பொருட்டு இந்திய அரசு, வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரூபே கடன் அட்டைகளும், விவசாயிகளுக்கு ரூபே விவசாய கடன் அட்டை திட்டத்தை செயல்படுத்த தெரிவித்ததன் அடிப்படையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்கடன் பெறும் விவசாயிகளுக்கு ரூபே கடன் அட்டை வழங்கும் திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 12.06.2017 அன்று துவக்கப்பட உள்ளது. இந்த அட்டையைக் கொண்டு தமிழக விவசாயிகள் இந்திய அளவில் எந்தவொரு ஏடிஎம் மையத்திலும் பணபரிவர்த்தனை மேற்கொள்ள இயலும்.

புரட்சித்தலைவி அம்மா 2016 சட்டமன்றத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியின்படி 31.03.2016 அன்று கூட்டுறவு நிறுவனங்களில் நிலுவையிலிருந்த சிறு, குறு விவசாயிகள் பெற்ற பயிர்கடன்களை தள்ளுபடி செய்ததன் மூலம் 12 இலட்சத்து 2 ஆயிரத்து 75 விவசாயிகள் ரூ.5280.25 கோடி தள்ளுபடியாக பெற்று பயனடைந்துள்ளனர். திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டிணம் ஆகிய மாவட்டங்களில் 2 இலட்சத்து 27 ஆயிரத்து 986 விவசாயிகளுக்கு ரூ.819.70 கோடி தள்ளுபடி செய்யப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. 2015-2016ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை பெறப்பட்டுள்ளது. இத்தொகையினை உடனடியாக விவசாயிகள் கணக்கில் வரவு வைத்து விவசாயிகளின் துயர் துடைக்க வேண்டும்.

ஏழை, எளிய மக்களுக்கு தரமான மருந்துகளை 15 சதவீதம் வரை தள்ளுபடியில் பெற்று பயனடையும் வகையிலான 111 அம்மா மருந்தகங்கள் மற்றும் 187 கூட்டுறவு மருந்தகங்கள் என 298 மருந்தகங்கள் மூலம் 30.04.2017 வரை ரூ.497.25 கோடி அளவில் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. திருச்சராப்பள்ளி மாவட்டத்தில் செயல்படும் 8 கூட்டுறவு மருந்தகங்கள் மற்றும் 4 அம்மா மருந்தகங்கள் வாயிலாக ரூ.432.14 இலட்சம் அளவிற்கு மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு ரூ.37.25 லட்சம் நுகர்வோர்களுக்கு தள்ளுபடி தொகையாக வழங்கப்பட்டுள்ளது. பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் மருந்தகங்களின் சிறப்பான செயல்பாடுகளை ஆய்வு செய்த கூட்டுறவுத்துறை அமைச்சர் தேவைப்படும் இடங்களில் துவக்க மண்டல இணைப்பதிவாளர்களுக்கு ஆணையிட்டார்கள். இறுதியாக, துறை அலுவலர்கள், தங்களது கள ஆய்வு பணியினை தீவிரமாக மேற்கொள்ள அறிவுரை வழங்கினார்கள். நலிவுற்ற கூட்டுறவு சங்கங்களை மேம்படுத்த நிதி வழங்கவும், அரசு அறிவிப்பில் உள்ள திட்டப்பணிகளை விரைந்து முடித்து அதனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அறிவுரை வழங்கினார்.

ஆய்வுக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திரசேகர் (மணப்பாறை), பரமேஸ்வரி (மண்ணச்சநல்லூர்), கூட்டுறவுசங்கங்களின் மாநிலமேலாண்மை இயக்குநர் அந்தோணிசாமிஜான்பீட்டர், இணைப்பதிவாளர்கள் ரவிச்சந்திரன், ஏகாம்பரம், காந்திநாதன், கே.ஜெயம், உமாமகேஸ்வரி, டி.ரமணிதேவி, மேலாண்மை இயக்குநர்கள் வானதி, மு.தனலட்சுமி, துணைப்பதிவாளர்கள் பாலசந்திரன், ராஜ்குமார், தீபாசங்கரி, மனோகரன், சித்ரா, ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் ஏ.ஜி.ராஜராஜன், திருச்சிராப்பள்ளி மாவட்ட அரசு தலைமை வழக்கறிஞர் ராஜ்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி;த்தலைவர் ராமு, மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தலைவர்; பத்மநாபன், கூட்டுறவு சங்கத்தலைவர்கள் ஜெயபால், ஜெயக்குமார், செல்வம், வெங்கடாச்சலம், முன்னாள் கோட்டத்தலைவர் ஞானசேகர், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் பூபதி, ராஜா, மலைக்கோட்டை ஐயப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து