திருவாரூரில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 8 போட்டித்தேர்வு : கலெக்டர் இல.நிர்மல் ராஜ் ஆய்வு செய்தார்

ஞாயிற்றுக்கிழமை, 11 ஜூன் 2017      திருவாரூர்
Thiruvarur 2017 06 11

 

திருவாரூர் வேலுடையர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 8 (கிரேடு-3) போட்டித்தேர்வு நடைப்பெற்று வருவதை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் வி.சுப்பையா மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-8 (கிரேடு 3) போட்டித்தேர்வுக்காக திருவாரூர் மாவட்டத்தில் 1 தேர்வு மையத்தில் 57 தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடைபெற்று வருகிறது. இப்போட்டி தேர்விற்கு 1131 தேர்வர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இதில் 519 தேர்வர்கள் தேர்வு எழுதி வருகின்றனர்.

மேலும் தேர்வு நடைபெறும் போது தடையில்லா மின் விநியோகம் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தேர்வு உரிய முறையில் நடைபெறுவதை கண்காணித்திட 1 பறக்கும் படை அலுவலர் , 1 சுற்றுக்குழு அலுவலர்கள்(மொபைல் டீம்), 57 அறைகண்காணிப்பாளர்கள், 3 முதன்மை கண்காணிப்பு அலுவலர்கள், 1 கண்காணிப்பு அலுவலர் தேர்வு பணிகளில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். மேலும் குரூப் 8 (கிரேடு 3) போட்டி தேர்வு முழுவதையும் வீடியோ ஒளிப்பதிவு செய்யப்படுகிறது. மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு தரை தளத்தில் தேர்வு எழுத வசதியும், பார்வையற்றோர் தேர்வு எழுதிட மாற்று நபர் தனி அறைகள் கொண்ட வசதியும் அமைப்பட்டிருக்கிறது.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் க.சக்திமணி, வருவாய் கோட்டாச்சியர் முத்துமீனாட்சி,தமிழ்நாடு அரசு தேர்வாணைய பிரிவு அலுவலர் பி.குழந்தைவேலு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து