ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நிறைவு

ஞாயிற்றுக்கிழமை, 11 ஜூன் 2017      திருவள்ளூர்

ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு நிகழ்ச்சியில் பட்டா மாற்றம்,கிராம நத்தம் பெயர்மாற்றம்,முதியோர் உதவித் தொகை,திருமண உதவித் தொகை,இயற்கை மரணம் உதவி தொகை உள்ள உதவிகள் வழங்கப்பட்டது.

நலத்திட்ட உதவி

ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்)மனிலா தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது.ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் கிருபா உஷா,தனி வட்டாட்சியர் லதா,மண்டல துணை வட்டாட்சியர் கதிர்வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஜமாபந்தி நிகழ்சியில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு மனுக்கள் பெறப்பட்டு மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்)மனிலா பயனாளிகளின் மனுக்களை ஆய்வு செய்து பட்டா மாற்றம்,கிராம நத்தம் பெயர்மாற்றம்,முதியோர் உதவித் தொகை,திருமண உதவித் தொகை,இயற்கை மரணம் உதவி தொகை அதற்கான உரிய ஆணைகளை வழங்கினார்.மீதமுள்ள மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு தீர்வு காணப்படும் என பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது ஜமாபந்தி நிகழ்ச்சியில் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள்,கிராம நிர்வாக அலுவலர்கள்,கிராம பொதுமக்கள் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து